Don't Miss!
- News
50 ஆயிரம் அடி உயரத்தில்.. ஸ்பைஸ்ஜெட் விமானத்திற்குள் திடீரென கிளம்பிய புகை! அலறிய பயணிகள்.. வீடியோ!
- Automobiles
மீண்டும் டாடாவை முந்தி 2வது இடத்திற்கு வந்த ஹூண்டாய்!! கார்கள் விற்பனையில் பலத்த போட்டி!
- Lifestyle
இந்த அறிகுறிகள் இருந்தால் ஆண்களுக்கு பாலியல் ஹார்மோன்கள் குறைவாக இருக்குனு அர்த்தமாம்... உஷார்!
- Sports
கேப்டனாக தினேஷ் கார்த்திக்கிற்கு முதல் வெற்றி.. பயிற்சி ஆட்டத்தில் இந்தியா அபாரம்.. முழு விவரம்
- Finance
தங்க கடன் மட்டும் 1 லட்சம் கோடி.. திடீரென தங்க நகையை அடகு வைக்கும் மக்கள்.. ஏன்..?!
- Technology
OnePlus Nord 2T வாங்கலாமா? இல்ல Nothing Phone 1 போனுக்கு வெயிட் பண்ணலாமா? எது பெஸ்ட்?
- Travel
அழகும் சாகசமும் நிறைந்த சுதாகட் கோட்டையில் ட்ரெக்கிங் செய்யலாம் வாருங்கள்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
ஏழு ஆண்டுகள் கழித்து தனுஷ்-அனிருத்... அதே கூட்டணியில் வரும் முதல் சிங்கிள்
சென்னை: 3, VIP, மாரி, தங்க மகன் என்று தொடர்ந்து ஹிட் பாடல்களை கொடுத்து வந்த காம்போதான் தனுஷ் மற்றும் அனிருத். அதுவும் அனிருத் இசையமைத்து, தனுஷ் எழுதி பாடும் பாடல் இன்னும் அதிக ஈர்ப்பை பெறும்
இந்த இருவரின் கூட்டணி DnA என்று ரசிகர்களால் அழைக்கப்பட்டது. கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகளுக்கு பிறகு இவர்கள் கூட்டணியில் திருச்சிற்றம்பலம் படத்தில் "தாய்க்கிழவி" என்ற முதல் சிங்கிள் வரும் ஜூன் 24 அன்று ரிலீஸ் ஆகிறது.
வருகின்ற ஆகஸ்ட் 18-ஆம் தேதி திருச்சிற்றம்பலம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தின் விநியோக உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் பிக்சர்ஸ் வாங்கியுள்ளது. ஸ்ட்ரீமிங் ரைட்ஸை சன் நெக்ஸ்ட் மற்றும் நெட்ஃப்லிக்ஸ் வாங்கியுள்ளது.
தந்தையர்
தினம்..தனுஷ்
வெளியிட்ட
வித்தியாச
வாழ்த்து
வீடியோ

அனிருத்தின் அறிமுகம்
ஐஸ்வர்யா தனுஷ் தனது முதல் படத்தை டைரக்ட் செய்ய நினைத்த போது யுவன் ஷங்கர் ராஜாவைத்தான் இசையமைப்பாளராக தேர்வு செய்தாராம். ஆனால் அனிருத் மீது தனுஷ் அதிக நம்பிக்கை வைத்து அவருடைய அறிவுரையின் பேரில்தான் "3" படத்திற்கு அனிருத் இசையமைக்க ஒப்பந்தமானார் என்று ஐஸ்வர்யா முன்னதாக கூறியுள்ளார்.

DnA கூட்டணி
தனுஷ் நடித்த படங்கள் மட்டுமல்லாது, அவரது தயாரிப்பில் வந்த படங்களான எதிர் நீச்சல், காக்கிச் சட்டை, நானும் ரவுடிதான் போன்ற படங்களுக்கும் அனிருத்தான் இசையமைத்தார். ஆனால் வெளி வராத காரணத்தினால் தங்க மகன் திரைப்படத்திற்கு பிறகு இவர்கள் ஒன்றாக பணி புரியவில்லை. இப்போதுஏழு ஆண்டுகள் கழித்து இந்தக் கூட்டணி இணைந்துள்ளதால் பெரும் எதிர்ப்பார்ப்பு உண்டாகியுள்ளது.

திருச்சிற்றம்பலம்
யாரடி நீ மோகினி, குட்டி, உத்தம புத்திரன் திரைப்படங்களை இயக்கியிருந்த மித்ரன் ஜவஹர் மீண்டும் நான்காவது முறையாக தனுஷை வைத்து இயக்கும் படம்தான் திருச்சிற்றம்பலம். ராசி கண்ணா, நித்யா மேனன் மற்றும் பிரியா பவானி ஷங்கர் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.

தாய்க் கிழவி
இந்தப் படத்தில் நாட்டாமை திரைப்படத்தில் இடம் பெற்ற "தாய்க் கிழவி" என்ற பிரபலமான வசனத்தை வைத்துதான் தனுஷ் பாடல் எழுதியுள்ளாராம். நேற்று இந்தப் பாடலின் புரமோ வெளியானது. அதில் அனிருத், நடன இயக்குநர் சதீஷ் மற்றும் தாய்க் கிழவி வசனத்தை பேசி இருந்த நடிகர் பொன்னம்பலம் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்தப் புரமோ ரசிகர்கள் மத்தியில் இன்னும் ஆர்வத்தை தூண்டியிருக்கிறது.