»   »  படத்திற்காக அல்ல குடும்பத்திற்காக ஒன்று சேர்ந்த தனுஷ், அனிருத்

படத்திற்காக அல்ல குடும்பத்திற்காக ஒன்று சேர்ந்த தனுஷ், அனிருத்

Posted By:
Subscribe to Oneindia Tamil
மீண்டும் ஒன்று சேர்ந்த தனுஷ் மற்றும் அனிருத். ஆனால்..!!

சென்னை: தனுஷ், அனிருத் ஆகியோர் படத்திற்காக அல்ல மாறாக குடும்பத்திற்காக ஒன்று சேர்ந்துள்ளனர்.

இசை அமைப்பாளர் அனிருத்தை தனுஷ் தனது பொறுப்பில் எடுத்துக் கொண்டு வளர்த்துவிட்டு அழகு பார்த்தார். பின்னர் அனிருத்தும், தனுஷும் பிரிந்துவிட்டனர். அவர்கள் மீண்டும் சேர வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

தனுஷுக்கு அனிருத்துக்கு பதில் ஷான் ரோல்டன் கிடைத்துவிட்டார்.

மகன் திருமணம்

மகன் திருமணம்

நடிகர் ஒய்.ஜி. மகேந்திரனின் மகன் ஹர்ஷவர்தனாவுக்கும், பட்டதாரியான ஸ்வேதாவுக்கும் சென்னை நீலாங்கரையில் உள்ள மண்டபம் ஒன்றில் திருமணம் நடைபெற்றது.

தனுஷ்

தனுஷ்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது மனைவி லதா, மகள்கள், மருமகன் தனுஷ், பேரக் குழந்தைகளுடன் உறவினரான ஒய்.ஜி. மகேந்திரன் வீட்டு திருமண விழாவில் கலந்து கொண்டார்.

குடும்பம்

குடும்பம்

அனிருத்தும் தனது குடும்பத்தோடு ஒய்.ஜி. வீட்டு திருமண விழாவில் கலந்து கொண்டார். படங்களுக்காக ஒன்று சேராவிட்டாலும், குடும்பத்திற்காக இருவரும் ஒன்று சேர்ந்தது ரசிகர்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.

மகிழ்ச்சி

மகிழ்ச்சி

திருமண நிகழ்ச்சியில் மணமக்களுடன் சேர்ந்து ரஜினி, ஒய்.ஜி. குடும்பத்தார் புகைப்படம் எடுத்துள்ளனர். அதில் தனுஷும், அனிருத்தும் இருப்பதை பார்த்து ரசிகர்கள் சந்தோஷப்பட்டுள்ளனர்.

விசு

விசு

ஒய்.ஜி. மகேந்திரனின் மகன் திருமண நிகழ்ச்சியில் நடிகர்கள் பிரபு, விசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மாலை நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கோலிவுட் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர்.

English summary
Dhanush and music director Anirudh have attended relative Y. Gee. Mahendran's son Harshavardhana's wedding. Superstar Rajinikanth attended the function with wife and daughters.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil