»   »  மீண்டும் இணைந்த தனுஷ் - அனிருத்?

மீண்டும் இணைந்த தனுஷ் - அனிருத்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இன்று நடைபெறும் அனிருத்தின் இசை நிகழ்ச்சிக்கு நடிகர் தனுஷ் வாழ்த்துத் தெரிவித்திருப்பது கோலிவுட்டில் பலரின் புருவத்தையும் உயரச் செய்துள்ளது.

கடைசியாக வெளியான தங்கமகன் திரைப்படத்திற்குப் பின் தனுஷ் - அனிருத் கூட்டணி உடைந்து விட்டது. 3, வேலையில்லாப் பட்டதாரி, மாரி, தங்கமகன் என்று வரிசையாக ஹிட் பாடல்களை கொடுத்த இந்த ஜோடி பிரிந்தது ரசிகர்கள் மத்தியில் அளவில்லா அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Dhanush, Aniruth Clash Come to End

மீண்டும் இருவரும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்பதே ரசிகர்கள் எண்ணமாக உள்ளது.இந்த நிலையில் கடந்த வாரம் புதுமுக நடிகர் ரிஷிகேஷை வாழ்த்திய தனுஷ் படத்தின் இசையமைப்பாளர் அனிருத் குறித்து எதுவும் கூறவில்லை.

இது இணையத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் இனிமேல் இருவரும் இணைந்து பணியாற்ற வாய்ப்பில்லை என்றே பலரும் கருதினர்.

தற்போது அனிருத்தை வாழ்த்தி இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் தனுஷ். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் "நாளை கோலாலம்பூரில் நடைபெறப்போகும் அனிருத்தின் இசை நிகழ்ச்சியை தவறவிடாதீர்கள்".

என்று கூறி அனிருத்திற்கு வாழ்த்துத் தெரிவிக்க பதிலுக்கு அனிருத் "நன்றி சகோதரா! விரைவில் தெறிக்க விடுகிறேன்" என்று கூறியிருக்கிறார்.

இதன் மூலம் தனுஷ் -அனிருத் இருவரும் மீண்டும் இணைந்து பணியாற்றுவார்கள் என்று இருவரின் ரசிகர்களும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

தனுஷ்-அனிருத் மீண்டும் இணைந்து பணியாற்றுவார்களா? பார்க்கலாம்.

English summary
Dhanush Wrote on Twitter "Don't miss anirudhofficial live concert Tom in KL. wishing the very best". Now Dhanush, Aniruth Clash Come to End? Wait & See!
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil