கண்ணு பட போகுது...தி கிரே மேன் ப்ரீமியருக்கு மகன்களுடன் வந்த தனுஷ்...தீயாய் பரவும் போட்டோ

லாஸ் ஏஞ்சல்ஸ் : அவெஞ்சர்ஸ் இன்பினிட்டிவார், அவெஞ்சர்ஸ் என்ட்கேம், கேப்டன் அமெரிக்கா படங்களை இயக்கிய ஜோய் ருசோ - ஆன்டனி ருசோ இயக்கி உள்ள படம் தி கிரே மேன்.

இந்த படத்தில் கிறிஸ் ஈவான்ஸ், ரயன் காஸ்லிங் ஆகியோருடன் தனுஷ் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். உலக சினிமா ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் படமாக தி கிரே மேன் அமைந்துள்ளது.

இந்த படம் ஜுலை 15 ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. அதே சமயம் தியேட்டரில் ரிலீஸ் செய்யப்பட்ட ஒரே வாரத்தில் ஓடிடி.,யிலும் தி கிரே மேன் ரிலீஸ் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. ஜுலை 22 ம் தேதி தி கிரே மேன் படம் நெட்ஃபிளிக்சில் ரிலீஸ் செய்யப்பட உள்ளது.

தனுஷின் ரோல் என்ன

தனுஷின் ரோல் என்ன

தி கிரே மேன் படத்தில் தனுஷ், குறைவாக பேசும், அதே சமயம் கொடுர கொலையாளியாக Avin San என்ற ரோலில் நடித்துள்ளார். கடந்த சில நாட்களாக அமெரிக்காவில் தி கிரேன் மேன் ப்ரொமோஷன் வேலைகளில் தனுஷ் பிசியாக இருந்து வருகிறார். அடுத்து நடிக்க போகும் கேப்டன் மில்லர் படத்தின் லுக்கில் கோட் ஷுட்டில் தனுஷ் வலம் வந்த போட்டோக்கள் வெளியாகி வந்தன.

தனுஷை எப்படி அறிமுகம் செய்துள்ளார்

தனுஷை எப்படி அறிமுகம் செய்துள்ளார்

இந்நிலையில் இந்த படத்தின் ப்ரீமியர் ஷோ லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது. இதன் ரெட் கார்பெட் நிகழ்வில் படத்தின் டைரக்டர்கள், ட்விட்டரில் 4-5 முாதங்களில் 10 மில்லியன் லைக்குகள் பெற்ற நபர் என தனுஷை அறிமுகம் செய்து வைத்தனர். தனுஷின் கேரக்டரை அறிமுகம் செய்வதற்காக தனுஷின் ஆக்ஷன் காட்சிகள் அடங்கிய க்ளிம்ப்ஸ் சமீபத்தில் வெளியிடப்பட்டது.

மகன்களுடன் வந்த தனுஷ்

மகன்களுடன் வந்த தனுஷ்


தி கிரே மேன் ப்ரீமியர் ஷோவின் ரெட் கார்பெட் நிகழ்வில் தனது மகன்கள் லிங்கா மற்றும் யாத்ராவுடன் தனுஷ் கலந்து கொண்டார். ஒரே மாதிரி கருப்பு கோட் ஷுட்டில் தனுஷ் மற்றும் அவரது இரண்டு மகன்கள் நடந்து வந்த போட்டோக்கள் சோஷியல் மீடியாவில் செம டிரெண்டாகி வருகிறது.

இந்திய சினிமாவே கொண்டாடுதே

இந்திய சினிமாவே கொண்டாடுதே

இந்த ஃபோட்டோக்களை தனுஷும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இந்த போட்டோக்களுக்கு லைக்குகள் குவிந்து வருகிறது.டிடி, கேன் கருணாஸ், விக்கி கெளசல் என கோலிவுட் முதல் பாலிவுட் வரையிலான இந்திய திரை பிரபலங்கள் பலரும் இதற்கு லைக் போட்டு, கமெண்ட் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X