»   »  தெலுங்கு பெண்களை கொந்தளிக்க வைத்த படத்தின் ரீமேக் உரிமையை வாங்கிய தனுஷ்

தெலுங்கு பெண்களை கொந்தளிக்க வைத்த படத்தின் ரீமேக் உரிமையை வாங்கிய தனுஷ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தெலுங்கில் ஹிட் அடித்துள்ள அர்ஜுன் ரெட்டி படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை வாங்கியுள்ளார் தனுஷ்.

புதுமுகம் சந்தீப் ரெட்டி இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடித்த அர்ஜுன் ரெட்டி தெலுங்கு படம் கடந்த 25ம் தேதி ரிலீஸாகி ஹிட்டாகியுள்ளது. படம் ரிலீஸான முதல் வாரத்திலேயே ரூ. 31 கோடி வசூலித்துள்ளது.

தெலுங்கானா, ஆந்திரா மாநிலங்களில் அர்ஜுன் ரெட்டி ஓடும் தியேட்டர்களில் இன்னும் கூட்டம் நிரம்பி வழிகிறது.

அர்ஜுன் ரெட்டி

அர்ஜுன் ரெட்டி

டாக்டர் அர்ஜுன் ரெட்டி கல்லூரியில் தனது ஜூனியரான ப்ரீத்தியை காதலிக்கிறார். காதல் முறிவுக்கு பிறகு அர்ஜுன் மதுவுக்கு அடிமையாகிவிடுகிறார். அதில் இருந்து எப்படி மீண்டு வருகிறார் என்பதே கதை.

தனுஷ்

தனுஷ்

தெலுங்கானா, ஆந்திராவில் சக்கை போடு போடும் அர்ஜுன் ரெட்டி படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை தனுஷ் வாங்கியுள்ளார். அவரே நடிக்கிறாரா இல்லை தயாரிப்போடு நின்று கொள்வாரா என்று தெரியவில்லை.

எதிர்ப்பு

எதிர்ப்பு

அர்ஜுன் ரெட்டி படம் இளைஞர்களை கெடுக்கும் வகையில் உள்ளது. மது, கல்லூரி மாணவர்களிடையே டேட்டிங்கை ஊக்குவிக்கிறது, பெண்களை மோசமாக காட்டுகிறது என்று கூறி விஜயவாடாவில் பெண்கள் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்சார் போர்டு

சென்சார் போர்டு

அர்ஜுன் ரெட்டி படத்திற்கு தடை விதிக்கக் கோரியும், சென்சார் போர்டை கண்டித்தும் பெண்கள் அமைப்பினர் சென்சார் போர்டுக்கு இறுதிச் சடங்கு செய்து வினோத முறையில் விஜயவாடாவில் போராட்டம் நடத்தினர்.

சர்ச்சை

சர்ச்சை

பெண்கள் அமைப்பினரை கொந்தளிக்க வைத்துள்ள அர்ஜுன் ரெட்டி படத்தின் ரீமேக் உரிமையை தனுஷ் வாங்கியுள்ளார். தமிழகத்தில் என்ன நடக்கப் போகிறதோ?

English summary
Dhanush has bought the tamil remake rights of telugu movie Arjun Reddy that hit the screens on august 25.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil