»   »  மலையாள 'லட்டு' மீது கண் வைத்த தனுஷ்: சிக்கிடுச்சுல!

மலையாள 'லட்டு' மீது கண் வைத்த தனுஷ்: சிக்கிடுச்சுல!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தனுஷ் மலையாள படமான லட்டுவின் வெளியீட்டு உரிமையை வாங்கியுள்ளார்.

நடிகர் தனுஷ் ரொம்பவே பிசியாக உள்ளார். அவர் இயக்கிய முதல் படமான ப. பாண்டி ஹிட்டாகியுள்ளது. படம் 25 நாட்களை கடந்து ஓடுகிறது. அதுவும் பாகுபலி 2 தாக்கத்தையும் தாண்டி ஓடிக் கொண்டிருக்கிறது.

தனுஷ் தற்போது மேலும் ஒரு புதிய விஷயத்தை செய்துள்ளார்.

லட்டு

லட்டு

வினய் போர்ட், பாலு வர்கீஸ், சபரீஷ் வர்மா, சஜு நவோதயா உள்ளிட்டோரை வைத்து அருண் கே டேவிட் எடுத்து வரும் மலையாள படம் லட்டு. லட்டு படத்தின் வெளியீட்டு உரிமையை வாங்கியுள்ளார் தனுஷ்.

தயாரிப்பு

தயாரிப்பு

கோலிவுட்டை அடுத்து மல்லுவுட்டில் தயாரிப்பாளராக அறிமுகமாகியுள்ளார் தனுஷ். டாமினிக் அருண் இயக்கத்தில் டொவினோ தாமஸ் நடிக்கும் படத்தை தனுஷ் தயாரிக்கிறார்.

நடிகர்

நடிகர்

முன்னதாக மம்மூட்டி, திலீப் நடிப்பில் வெளியான காமத் அன்ட் காமத் படத்தில் தனுஷ் கவுரவத் தோற்றத்தில் நடித்தார். ஒரு பாடலுக்கு மம்மூட்டியுடன் சேர்ந்து ஆடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

விஐபி2

விஐபி2

தனுஷ் தனது மச்சினி சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஐபி 2 படத்தில் நடித்து முடித்துள்ளார். படத்தின் ரிலீஸ் தேதி இன்று அறிவிக்கப்பட உள்ளது என்று தனுஷ் ட்வீட்டியுள்ளார்.

English summary
Dhanush has bought the theatrical rights of Arungeorge K. David’s upcoming malayalam movie Ladoo.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil