»   »  'பல்லை இளித்த தங்கமகன்'.... நஷ்டத்தை ஈடுகட்ட தனுஷிடம் கால்ஷீட் கேட்கும் விநியோகஸ்தர்!

'பல்லை இளித்த தங்கமகன்'.... நஷ்டத்தை ஈடுகட்ட தனுஷிடம் கால்ஷீட் கேட்கும் விநியோகஸ்தர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

தங்க மகன் படம் நஷ்டத்தை ஏற்படுத்தியதால் தங்களுக்கு தனுஷ் கால்ஷீட் கொடுத்து மேலும் ஒரு படத்தில் நடித்துத் தர வேண்டும் என்று படத்தை வெளியிட்ட விநியோகஸ்தர் மல்லுக்கட்ட ஆரம்பித்துள்ளார்.

தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் தங்க மகன்.


Dhanush to compensate Thanga Magan loss

இந்தப் படத்தை தனுஷும் மதுரை அன்பும் இணைந்து தயாரித்திருந்தனர். படத்தை வெளியிடும் உரிமையை ஸ்ரீகிரீன் நிறுவனத்துக்கு கொடுத்திருந்தனர்.


படம் பெரிய வெற்றி பெறும் என ஏக பில்டப் கொடுத்து ஸ்ரீகிரீன் நிறுவனம் வெளியிட்டது. ஆனால் படுதோல்வியைச் சந்தித்தது தங்கமகன்.


Dhanush to compensate Thanga Magan loss

இதனால், படத்தின் நஷ்டத்தை ஈடுகட்ட தங்கள் நிறுவனத்துக்கு ஒரு படம் பண்ணித் தரவேண்டும் என இந்த நிறுவனம் தொணதொணக்க ஆரம்பித்துள்ளதாம்.


Dhanush to compensate Thanga Magan loss

ஏற்கெனவே இந்த நிறுவனம் வெளியிட்ட சண்டி வீரனும் படு தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது. ஸ்ரீகிரீன் 'ராசியைப்' பார்த்து மிரண்டு நிற்கும் தனுஷ், மீண்டும் அந்த நிறுவனத்துக்கு கால்ஷீட் கொடுப்பாரா?

English summary
The distributors of Dhanush's Thanga Magan is urging Dhanush to give call sheet to compensate the loss of the movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil