»   »  மாரி... ரெண்டாம் பாகத்துக்கு தயாராகிறார் தனுஷ்!

மாரி... ரெண்டாம் பாகத்துக்கு தயாராகிறார் தனுஷ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி பாக்ஸ் ஆபீஸில் பாஸா பெயிலா என்று தெரியாமல் ஓடிப் போன படம் மாரி. இந்தப் படத்தின் தொலைக்காட்சி உரிமை நீண்ட இழுபறிக்குப் பிறகு சமீபத்தில்தான் விஜய் தொலைக் காட்சிக்கு கைமாறியது.

படத்துக்கு நெகடிவ் விமர்சனங்கள் நிறைய இருந்தாலும், தனுஷ் இந்தப் படத்தை விட்டுக் கொடுக்கவே இல்லை. படத்தின் இயக்குநர் பாலாஜி மோகன் உள்ளிட்டோருக்கு தங்கச் சங்கிலியெல்லாம் பரிசளித்தார்.

Dhanush confirms sequel to Maari movie

இந்த நிலையில், மாரி படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க முடிவு செய்துள்ளார் தனுஷ்.

இதனை தனுஷும் இயக்குநர் பாலாஜி மோகனும் உறுதிப் படுத்தியுள்ளனர். மாரிக்கு பிரமாதமான இரண்டாம் பாகம் உள்ளது. விரைவில் அறிவிக்கப் போகிறோம் என பாலாஜி மோகன் தெரிவித்தார்.

ஏற்கெனவே நான்கு படங்களை ஒப்புக் கொண்டுள்ள தனுஷ், ஐந்தாவதாக இந்தப் படத்திலும் நடிக்கிறார்.

English summary
Recently Dhanush has revealed that talks are going on for Maari sequel. Now, Maari director Balaji Mohan too has confirmed that the sequel is very much on.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil