»   »  தனுஷ்-அனிருத் சண்டை இப்போதைக்கு தீராது போலவே?

தனுஷ்-அனிருத் சண்டை இப்போதைக்கு தீராது போலவே?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடக்குற சம்பவங்களை வச்சு பார்த்தா தனுஷ்- அனிருத் சண்டை இப்போதைக்கு தீராது போலவேன்னு கோலிவுட் வட்டாரங்கள்ல ஒரு பேச்சு அடிபடுது.

Dhanush Continuously avoid Anirudh

வேலையில்லாப் பட்டதாரி படத்துல தனுஷோட தம்பியா நடிச்ச ரிஷிகேஷ் அடுத்து ஒரு படத்துல ஹீரோவா நடிக்கப் போறது எல்லோருக்கும் தெரிஞ்ச விஷயம் தான்.

ஆனா இதுல தெரியாத ஒரு விஷயமும் இருக்கு. அதாவது எல்லோருமே அந்தப் படத்தோட இசையமைப்பாளர் அனிருத்துக்கு வாழ்த்து சொன்னாங்க.

நம்ம தனுஷ் என்ன பண்ணினார் தெரியுமா? அந்தப் படத்துல நடிக்கிற ரிஷிகேஷ்க்கு மட்டும் வாழ்த்து சொல்லி ட்வீட் போட்டுருக்காரு.

இதைப் பார்த்தவங்க ஒரு புதுமுக நடிகரை வாழ்த்தறது நல்ல விஷயம் தான் அதுக்காக அனிருத்தோட பேரைக் கூட அதுல சேக்காதது எந்த விதத்துல நியாயம்னு கேட்கறாங்க.

அவ்வளவு ஏன் தனுஷோட ரசிகர்களே அந்த வாழ்த்து ட்வீட்ல அனிருத் பேரையும் சேருங்கன்னு தனுஷ்கிட்ட கோரிக்கை வைக்க ஆரம்பிச்சிட்டாங்கன்னா பாத்துக்கங்க.

ஆனா இது எதையும் கண்டுக்காம தனுஷ் தன்னோட அடுத்த வேலைய பார்க்க போயிட்டாரு. இதைப் பார்க்கறவங்க, கேட்கறவங்க எல்லோரும் இனிமே கண்டிப்பா ரெண்டு பேரும் சேர வாய்ப்பில்லைன்னு சொல்றாங்க.

இதுல குறிப்பிடத்தக்க விஷயம் என்னன்னா தனுஷ் ஹாலிவுட் படத்துல நடிக்கப் போறார்னு தெரிஞ்ச உடனே அனிருத் தனுஷ்க்கு வாழ்த்து சொல்லி ட்வீட் போட்டாரு.

அந்த ட்வீட்ட பார்த்த எல்லோரும் தனுஷ் - அனிருத் ரெண்டு பேரும் சீக்கிரமே சேர்ந்துடுவாங்கன்னு நம்பிக்கையோட இருந்தாங்க.

இப்போ பார்த்தா எல்லோருடைய நம்பிக்கையையும் தனுஷ் ஒரே ட்வீட்ல காலி பண்ணிட்டுப் போயிட்டாரு...

English summary
Dhanush Continuously avoid Anirudh? His Latest Tweet Confirmed the Rumors.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil