Dhanush Son: முதன்முதலாக மேடை ஏறிய தனுஷ் மகன்.. அடடே அப்பாவும் மகனும் சேர்ந்து என்னமா ஆடுறாங்க!

சென்னை: தனுஷ் நடிப்பில் உருவான படமான இட்லி கடை படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று அதாவது செப்டம்பர் 12ஆம் தேதி நடைபெற்றது. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற இந்த இசை வெளியீட்டு விழாவில் படக்குழுவினர், தனுஷ் குடும்பத்தினர் என பலரும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் தனுஷ் மற்றும் ஜி.வி. பிரகாஷ் குமார் மேடையில் பாடிக் கொண்டு இருந்தபோது, அவரது மகனை அவர் அழைக்க, அவரும் வர இருவரும் செம ஜாலியாக நடனமாடினர்.

தனுஷ் கதை எழுதி, இயக்கி, நடித்து உருவாகியுள்ள படம் இட்லி கடை. இந்த படத்தை அவர் டான் பிக்சர்ஸ் உடன் இணைந்து தயாரிக்கவும் செய்துள்ளார். இப்படி இருக்கையில் இந்த படம் அவரது நடிப்பில் வெளியாகவுள்ள 52வது படம். முந்தைய படமான குபேரா தமிழில் அவருக்கு பெரிய அளவில் கை கொடுக்க வில்லை என்றாலும் தெலுங்கில் நன்றாகவே ஒர்க் -அவுட் ஆனது. வரும் அக்டோபர் 1ஆம் தேதி படம் வெளியாகவுள்ளது. படத்தின் புரோமோசன் வேலைகள் வெகு சிறப்பாக நடைபெற்றுக் கொண்டு உள்ளன. படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

Dhanush Dance With His Son Linga On Idli Kadai Audio Launch Stage

இசை வெளியீட்டு விழாவில் தனுஷ் இட்லி கடை படத்தில் இடம் பெற்றுள்ள, என் சாமி பாடலை தனுஷ் மேடையில் பாடினார். இந்த பாடலை படத்திலும் அவர்தான் பாடியுள்ளார். மேலும் இந்த பாடலை எழுதியதும் அவர்தான். இப்படி இருக்கையில் இந்த பாடலை மேடையில் பாடிக் கொண்டு இருக்கும் போது, தனது மகன் லிங்காவை மேடைக்கு அழைத்தார். அவர் மேடைக்கு வந்ததும் தொடர்ந்து பாடலைப் பாடிய தனுஷ், வரிகள் முடிந்ததும், மைக்கை கீழே வைத்துவிட்டு, தனது மகனுடன் சேர்ந்து ஆடினார். இதைப் பார்த்ததும் ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். அவரது மகனும் தனுஷ் உடன் இணைந்து கொண்டு ஆட்டம் போட்டார். இப்படி இருக்கையில் ஆடி முடித்ததும் மகன் லிங்காவுக்கு முத்தம் கொடுத்தார். இது தொடர்பான வீடியோக்கள் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இந்தக் காட்சியைப் பார்த்த பலரும் தனுஷ் தனது மகனை மேடையேற்றி விட்டாரே என்றும் பேசி வருகிறார்கள்.

Dhanush Dance With His Son Linga On Idli Kadai Audio Launch Stage

இட்லி கடை படத்தில் தனுஷ் உடன் நித்யா மேனன், ஷாலினி பாண்டே, அருண் விஜய், சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். படத்தை ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிடுகிறது. இன்பநிதி ரெட் ஜெயண்ட் நிறுவனத்தின் பொறுப்பாளராக மாறிய பின்னர் வெளியாகும் முதல் படம் இட்லி கடை என்பதும் குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X