Don't Miss!
- News
"மரண அடி".. இதான் கரெக்ட்டான டைம்.. இதுக்கும் தடையா?.. தாலிபன்களின் ஓவர் அட்டகாசம்.. எகிறிய ஐ.நா.
- Finance
பட்ஜெட் 2023: இதற்கு தான் முக்கியத்துவம் தரனும் - ப. சிதம்பரம்..!
- Lifestyle
இறந்த உடலை சாப்பிட்ட அரசர்கள் முதல் அரசவையில் சுயஇன்பம் செய்த அரசர் வரை தலைசுற்ற வைத்த மன்னர்கள்...!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Automobiles
கார் பைக்குகளில் இருப்பது போல ரயில் இன்ஜின்களிலும் கியர் இருக்குமா? இது எப்படிப் பயன்படுகிறது?
- Sports
"எங்களுக்கு நீங்க ஆர்டர் போடாதீங்க" பணிச்சுமை விவகாரம்.. பிசிசிஐ - ஐபிஎல் அணிகள் இடையே மோதல்- விவரம்
- Technology
ஒட்டுமொத்த பட்ஜெட் போன்களையும் பேக்கில் ஓடவிடப்போகும் OnePlus Nord 3.! இது தான் காரணமா?
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
அடபாவிங்களா.. பெயர் மாற்றத்தை கலாய்த்த தனுஷ் பட இயக்குநர்.. அந்த படத்தின் பெயரை மாற்றவும் திட்டம்?
சென்னை: ஊர்களின் பெயர்களில் உள்ள ஆங்கில உச்சரிப்பை மாற்றி சமீபத்தில் தமிழக அரசு ஆணை வெளியிட்டு இருந்தது.
Recommended Video
கோயம்பத்தூர், மதுரை, வேலூர் உள்பட பல ஊர்களின் பெயர் உச்சரிப்புகள் மாறியிருக்கின்றன.
இதை கலாய்த்து ஏகப்பட்ட மீம்கள், ட்ரோல்கள் வெளியான நிலையில், இயக்குநர் கார்த்திக் நரேன் தனது இன்ஸ்டா பக்கத்தில் கலாய்த்துள்ளது வைரலாகி வருகிறது.

திரும்பி பார்க்க வைத்த முதல் படம்
இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் வெளியான துருவங்கள் பதினாறு திரைப்படம் அதன் க்ரிப்பான திரைக்கதை காரணமாக தமிழ் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் மத்தியில் பாராட்டுக்களை அள்ளியது. முதல் படத்திலேயே இப்படியொரு ஸ்கோர் செய்கிறானே யார் இந்த பையன் என கெளதம் மேனன் பாராட்டி அடுத்த படத்தை தயாரிக்க முன்வந்தார்.

ஏங்கவைத்த இரண்டாவது படம்
முதல் படம் தமிழ் சினிமாவையே திரும்பி பார்க்க வைத்த நிலையில், இவர் இயக்கத்தில் உருவான இரண்டாவது படமான நரகாசூரன் எப்போது ரிலீஸ் ஆகும் என இவரையே ஏங்க வைத்திருப்பது தான் காலம் செய்த கோலம். கெளதம் மேனன் தயாரிப்பில் உருவான அந்த படம் ஏன் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை என்பதற்கு சரியான காரணம் இதுவரை தெரியவில்லை.

கலாய்த்த இயக்குநர்
தமிழ்நாட்டின் ஊர்ப் பெயர்களின் ஆங்கில உச்சரிப்பை மாற்றியதை பலரும் மீம் போட்டு கலாய்த்து வரும் நிலையில், அதுகுறித்து ஒரு பதிவை தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார் கார்த்திக் நரேன். கோயம்பத்தூர் என்பதற்கு (Coimbatore) என பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது (Koyampuththoor) என மாற்றி வெளியிடப்பட்ட அரசாணையை பார்த்து, "அடபாவிங்களா" என கலாய்த்து இருக்கிறார்.

சூப்பர் ஐடியா
சந்திப் கிஷன், அரவிந்த் சாமி, ஸ்ரேயா, ஆத்மிகா நடிப்பில் சஸ்பென்ஸ் த்ரில்லராக கார்த்திக் நரேன் இயக்கியுள்ள நரகாசூரன் படத்திற்கு தற்போது ஆங்கிலத்தில் வைக்கப்பட்டிருக்கும் (Naragasooran) என்ற ஸ்பெல்லிங்கை (Narakasuran) என மாற்றி வைத்தால் ஒருவேளை அந்த படமும் ரிலீஸ் ஆகுமா என்றும் பதிவிட்டு ரசிகர்கள் மத்தியில் வைரலாக்கி உள்ளார்.

தனுஷ் படம்
கார்த்திக் நரேன் இயக்கத்தில் இந்த ஆண்டு வெளியான மாஃபியா படம் பெரும் எதிர்பார்ப்புடன் வெளியானது. ஆனால், கலவையான விமர்சனங்களையே பெற்றது. அந்த படத்தின் அடுத்த பாகம் டெக்ஸ்டர் வெளியாகும் என்றும் கூறியிருக்கிறார். மேலும், தனுஷின் 43வது படத்தையும் லாக்டவுனுக்கு பிறகு கார்த்திக் நரேன் இயக்க உள்ளார்.