»   »  அனிருத்துக்கு அடுத்தடுத்து 'செக்' வைக்கும் தனுஷ்?

அனிருத்துக்கு அடுத்தடுத்து 'செக்' வைக்கும் தனுஷ்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பவர் பாண்டி படத்தை அடுத்து சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்கும் படத்திலும் அனிருத்தை ஒப்பந்தம் செய்யாததற்கு தனுஷ் காரணம் என்று கூறப்படுகிறது.

தனுஷ் தனது மனைவி ஐஸ்வர்யாவின் சொந்தக்கார பையனான இசையமைப்பாளர் அனிருத்தை தட்டிக் கொடுத்து வாய்ப்பு அளித்து வளர்த்துவிட்டு அழகு பார்த்தார். எப்பொழுது அனிருத் சிம்புவிடன் சேர்ந்து பீப் பாடல் சர்ச்சையில் சிக்கினாரோ அன்றே தனுஷுக்கு அவர் மீது கோபம் வந்துவிட்டது.

மேலும் தனக்கு பிடிக்காத சிவகார்த்திகேயனுடன் அனிருத் சேர்ந்ததை பார்த்து மேலும் கோபம் அடைந்தார்.

தனுஷ்

தனுஷ்

தனுஷ் தனது படங்களில் அனிருத்தை இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்வதை தவிர்க்கத் துவங்கினார். இந்நிலையில் அவர் இயக்குனர் ஆகியுள்ள பவர் பாண்டியில் அனிருத்தை ஒப்பந்தம் செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அனிருத்

அனிருத்

பவர் பாண்டியில் தனுஷ் அனிருத்துக்கு பதிலாக ஷான் ரோல்டனை இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்துள்ளார். மேலும் ரோல்டனின் திறமையை சமூக வலைதளங்களில் பாராட்டி வருகிறார் தனுஷ்.

சவுந்தர்யா

சவுந்தர்யா

சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்கும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்திலும் தனுஷின் மனம் கவர்ந்த ரோல்டனையே இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்கிறார்களாம். இதற்கு பின்னால் தனுஷ் இருப்பதாக கூறப்படுகிறது.

சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன்

தனுஷ் அனிருத்தை ஒதுக்கினாலும் அவரை சிவகார்த்திகேயன் தனது படங்களுக்கு பரிந்துரை செய்து நல்லபடியாக பார்த்துக் கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Dhanush is reportedly in no mood to give Music director Anirudh a second chance after he spoiled the relationship by getting himself in Beep song controversy.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil