»   »  வெள்ள நிவாரண நிதி: சூர்யா, கார்த்தி, விஷாலைத் தொடர்ந்து களத்தில் குதித்த தனுஷ்

வெள்ள நிவாரண நிதி: சூர்யா, கார்த்தி, விஷாலைத் தொடர்ந்து களத்தில் குதித்த தனுஷ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ 5 லட்சத்துக்கான காசோலையை வழங்கி இருக்கிறார் நடிகர் தனுஷ்.

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக பெய்த கனமழையால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் கடலூர் உள்ளிட்ட பல பகுதிகள் கடுமையாகப் பாதிப்படைந்தன.

Dhanush Donates 5 Lakhs

இந்தக் கனமழை மக்களின் இயல்பு வாழ்க்கையை பெரிதும் பாதித்த நிலையில் மக்களுக்கு உதவும் விதமாக நடிகர் சங்கத்தினர் பல்வேறு நடிக, நடிகையரிடமும் நிதி திரட்டி வருகின்றனர்.

நடிகர் சிவகுமார் குடும்பத்தைச் சேர்ந்த சூர்யா மற்றும் கார்த்தி இருவரும் சுமார் 25 லட்சத்தை வழங்கினர். தற்போதைய நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளர் விஷால் தனது பங்களிப்பாக ரூ 10 லட்சத்தை வழங்கி இருந்தார்.

இந்நிலையில் நடிகர் தனுஷ் தனது பங்களிப்பாக ரூ 5 லட்சத்தை நடிகர் சங்கத் தலைவர் நாசரிடம் வழங்கி இருக்கிறார். நடிகர் சங்க நிர்வாகிகள் முன்னிலையில் நடிகர் தனுஷ் இந்தத் தொகையை வழங்கினார்.

நடிகர்கள் வழங்கும் இந்தத் தொகையானது முதல் அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

English summary
Actor Dhanush Donates 5 lakhs for flood relief fund, The fund will be handed over to CM Jayalalithaa soon.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil