»   »  செந்தில்குமார் இயக்கத்தில்... தனுஷின் கொடி துவங்கியது

செந்தில்குமார் இயக்கத்தில்... தனுஷின் கொடி துவங்கியது

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தனுஷின் அடுத்த படங்களில் ஒன்றான 'கொடி'யை இன்று பூஜையுடன் படக்குழுவினர் துவக்கி இருக்கின்றனர்.

தனுஷ் அடுத்ததாக எதிர்நீச்சல், காக்கிச்சட்டை ஆகிய படங்களை இயக்கிய துரை. செந்தில்குமாரின் புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார்.

Dhanush - Durai Senthil Kumar's Kodi Launched Today

தனுஷ் 2 வேடங்களில் நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக த்ரிஷா, ஷாம்லி இருவரும் நடிக்கின்றனர்.இருவரும் தனுஷுடன் இணையும் முதல் படம் கொடி என்பது குறிப்பிடத்தக்கது.

தீபாவளி முடிந்து தொடங்கப்படும் என்று எதிர்பார்த்த இப்படம் மழை காரணமாக தள்ளிப்போன நிலையில், இன்று பூஜையுடன் இப்படத்தை தொடங்கி இருக்கின்றனர்.

தனுஷ் இப்படத்தில் அரசியல்வாதியாக நடிப்பதால் இப்படத்திற்கு கொடி என்ற பெயரை வேறு ஒருவரிடமிருந்து படக்குழுவினர் கைப்பற்றியதாக கூறுகின்றனர்.

விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு கோவை சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடங்கவிருக்கிறது.

English summary
Dhanush, Trisha, Shamile starrer 'Kodi' Launched Today, Directed By Durai Senthilkumar.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil