Dhanush: பெத்தவங்களுக்கு பாரமா இருக்க விரும்பல.. தனுஷ் பேச்சு ப்ளூ சட்டை மாறனுக்கும் பதிலாகிடுச்சே!

சென்னை: நடிகர் தனுஷின் இட்லி கடை படம் வரும் அக்டோபர் 1ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. இந்த படத்திற்கான புரோமோசன் வேலைகள் வெகு சிறப்பாக நடைபெற்றுக் கொண்டுள்ளது. இப்படி இருக்கையில் இந்த படத்திற்காக தமிழ்நாடு முழுவதும் படத்தின் புரோமோசனை நடத்த திட்டமிட்ட தனுஷ் ஏற்கனவே சென்னை, கோவை மற்றும் மதுரையில் புரோமோசன் மேற்கொண்டார். இந்நிலையில் இன்று அதாவது, செப்டம்பர் 25ஆம் தேதி திருச்சியில் இட்லி கடை படத்தின் புரோமோசன் நடைபெற்றது. இதில் தனுஷ் பேசியது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

அதாவது திருச்சியில் அவர் பேசியது பலரையும் எமோஷனல் ஆக்கியது. இந்த நிகழ்ச்சியில் பரிதாபங்கள் யூடியூப் சேனலச் சேர்ந்த கோபி, சுதாகர் மற்றும் டிராவிட் என மூவரும் கலந்து கொண்டார்கள். இவர்கள் மூவரும் தனுஷிடம் கேள்விகள் கேட்டனர். அதில் டிராவிட் கேட்கும்போது, முதலில் எல்லாம் ஒல்லியாக இருக்கும் நபர்களை கிண்டலடிப்பார்கள். ஆனால் நீங்கள் வந்த பின்னர்தான் ஒல்லியாக இருப்பவர்களை மாஸாக பார்க்கிறார்கள். எங்களுக்கு எல்லாம் நீங்கள் இன்ஸ்பிரேஷனாக இருக்கையில் உங்களுக்கு யார் இன்ஸ்பிரேஷன் என்று கேள்வி எழுப்பினார். அதற்கு உடனே, இங்கு இருக்கும் முக்கால்வாசி பேர் என்னைப்போல் ஒல்லியாகத்தான் இருப்பார்கள் என்று ரசிகர்களை நோக்கி கை காட்டுகிறார். சிறு வயதில் அதுமாதிரியான கிண்டல்களை எதிர்கொள்ள கஷ்டமாகத்தான் இருந்தது. ஆனால் அதன் பின்னர் பக்குவம் வந்துவிட்டது. புரூஸ்லியே ஒல்லியாக தான் இருந்தாரு என்று பதில் அளித்தார்.

Dhanush Emotioanl Speech AtIdli Kadai Trailer Launch Event at Trichy

சின்ன வயது சம்பவம்: அதேபோல் அடுத்து பரிதாபங்கள் சுதாகர், இட்லி கடை படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தான் சிறுவயதில் இட்லி வாங்கவே கஷ்டப்பட்டதாக கூறினீர்கள், உங்களது அப்பா இயக்குநராக இருக்கும்போது இது எப்படி? எனக்குப் புரியவில்லை என்று கேள்வி எழுப்பினார். அதற்கு, நான் 83இல் பிறந்தேன். ஆனால் எனது அப்பா 91இல் தான் இயக்குநராக மாறினார். அந்த இடைப்பட்ட காலத்தில் வீட்டில் சிரமம் தான். நாங்கள் நான்கு பேரும் வீட்டின் கஷ்டத்தை உணர்ந்த குழந்தைகள்.

பாரமாக இருக்க விரும்பல: நாங்கள் பெற்றவர்களுக்கு பாரமாக இருக்க விரும்பாதவர்கள். எனவே பூ பறிக்க வேலைக்குச் சென்று அந்த பணத்தை எங்கள் செலவுக்கு வைத்துக் கொள்வோம். அப்பா இயக்குநர் ஆன பிறகும் சில ஆண்டுகள் சிரமமாகத்தான் இருந்தது. 1994ஆம் ஆண்டுக்குப் பிறகுதான் எங்களுக்கு கொஞ்சம் சௌகரியமான வாழ்க்கை கிடைத்தது" என்று பதில் அளித்தார். இவரது இந்த பதில் இசை வெளியீட்டு விழாவில் தனுஷ் பேசியதை கேள்விக்குள்ளாக்கிய ப்ளூ சட்டை மாறனுக்கும் பதிலாக அமைந்துவிட்டது.

Dhanush Emotioanl Speech AtIdli Kadai Trailer Launch Event at Trichy

எமோஷனல்: அடுத்து கோபி கேள்வி கேட்டார். சந்தோஷத்தில் அனைவரும் உடன் இருப்பார்கள். ஆனால் கஷ்டத்தில் வெகு சிலர் மட்டுமே உடன் இருப்பார்கள். அப்படி உங்களுக்கு கஷ்டம் எனும்போது உடன் இருந்தது யார் யார் என்று கேள்வி எழுப்பினார். அதற்கு இந்த கேள்விக்கு நான் இந்த படத்தில் ஒரு பாடலையே எழுதி உள்ளேன் என்று படத்தில் இடம் பெற்றுள்ள பாடலான " எம் பாட்டன் சாமி வரும் பாடலின் வரிகளைக் குறிப்பிட்டார். இதனால் அவரை அந்த பாடலைப் பாடச் சொல்லி அவர்கள் கேட்க, அவரும் பாடினார். இந்த பாடல் ரசிகர்களை உருக்கும் படியாக இருந்தது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X