Idli Kadai Audio Launch: 4 இட்லி சாப்பிட தனுஷ் பட்ட பாடு.. ரசிகர்கள் முன்னாடி இப்படி உருகிட்டாரே?

சென்னை: தனுஷ் நடித்து, இயக்கி, தயாரித்துள்ள படம் இட்லி கடை. அவரது இயக்கத்தில் உருவாகியுள்ள நான்காவது படம் இது. இந்த படத்தில் நித்யா மேனன், ஷாலினி பாண்டே, அருண் விஜய், சத்யராஜ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளார்கள். படம் வரும் அக்டோபர் 1ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. இது மட்டும் இல்லாமல் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று அதாவது செப்டம்பர் 14ஆம் தேதி நடைபெற்றது. இப்படி இருக்கையில் தனுஷ் இந்த நிகழ்ச்சியில் பேசும்போது பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அந்த வகையில் படத்தின் கதைக்கும் தனது பால்ய காலத்திற்கும் உள்ள தொடர்பு குறித்தும் பேசினார்.

அவர் பேசுகையில், " நான் சின்ன பையனாக இருக்கும்போது எங்கள் ஊரில் ஒரு இட்லி கடை இருக்கும். அந்த இட்லி கடையில் எப்படியாவது இட்லி சாப்பிடனும்னு தினமும் எனக்கு தோனீட்டே இருக்கும். என்னுடைய சின்ன வயசுல ரொம்ப முக்கியமான கேரக்டர் அந்த இட்லி கடை. அதனால என் மனசுல இருந்த ஒரு ஆசை என்னன்ன, எப்படியாவது அந்த இட்லி கடையில இட்லி சாப்பிடனும் என்பதுதான். ஆனால் என் கையில் காசு இருக்காது. எங்க ஊர்ல எல்லாம் என்ன செய்வார்கள் என்றால், காலையில் வயலில் இறங்கி பூ பறிக்க சொல்வார்கள். எவ்வளவு பூக்கள் பறித்து கொடுக்கிறோமா அதுக்கு ஏத்த மாதிரி காசு கிடைக்கும்.

Dhanush Emotional Speech At Idli Kadai Audio Launch Infront Of His Fans
Photo Credit:

எமோஷனல் பேச்சு: அதனால நானும் என்னோட அக்காவும் காலையில 4 மணிக்கெல்லாம் எழுந்து அந்த வயலுக்கு போய் பூ பறிப்போம். தொடர்ந்து இரண்டரை மணி நேரம் விடாமல் பூ பறிக்க வேண்டும். அப்படி செய்தால் ஆளுக்கு இரண்டு ரூபாய் கொடுப்பாங்க. அதை எடுத்துக் கொண்டு நேராக ஒரு தோட்டத்துக்கு செல்வோம். அங்கே இருக்கும் ஒரு குட்டையில் நல்லா ஜாலியா ஆசை தீர குளிப்போம். அதுக்கு அப்புறமா அந்த கடைக்கு போய் இரண்டு ரூபாய் கொடுத்து 4 இட்லி வாங்கி சாப்பிடுவோம்.

படத்தின் கதை: அப்படி கஷ்டப்பட்டு உழைத்து சாப்பிடும் போது வரும் சுவையும் நிம்மதியும் சந்தோஷமும் பெரிய பெரிய ரெஸ்டாரண்ட்களில் கூட எனக்கு கிடைக்காது. இந்த இட்லி கடையை வைத்து நாம் ஏன் ஒரு படம் எடுக்கக் கூடாதுனு ஒரு நாள் தோனுச்சு. அதனால வெறும் இட்லி கடை மட்டுமின்றி எங்க கிராமத்தில் என் மனசுல பாதிப்புகளை ஏற்படுத்திய சில உண்மை கதாபாத்திரங்களையும், அதுக்கு அப்புறம் நாங்கள் சென்னை வந்தபிறகு என் மனதை பாதித்த சில உண்மை கதாபாத்திரங்களையும் வைத்து எழுதப்பட்ட கற்பனையான கதை இந்த 'இட்லி கடை' படத்தின் கதை" என்று பேசினார். தனது ரசிகர்கள் முன்பு எப்போது கொஞ்சம் எமோஷனலாக பேசக்கூடியவர் தனுஷ். அந்த வகையில் இம்முறையும் மிகவும் எமோஷனலாக பேசிவிட்டார். அவரது பேச்சு தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வேகமகா பரவி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X