Idli Kadai : எங்களை உள்ளே விடவில்லை என்றால் கேட் உடைக்கப்படும்.. தனுஷ் ரசிகர்கள் உச்சக்கட்ட கோபம்!
சென்னை: இட்லி கடை படத்தின் இசை வெளியீட்டு விழா என்பது நேற்று அதாவது செப்டம்பர் 14ஆம் தேதி நடைபெற்றது. படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். படத்தை தனுஷ் எழுதி, இயக்கி, தயாரித்து நடிக்கவும் செய்துள்ளார். படத்தில் அருண் விஜய், நித்யா மேனன், ஷாலினி பாண்டே, சத்யராஜ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளார்கள். படம் வரும் அக்டோபர் மாதம் முதல் தேதியில் வெளியாகவுள்ளது. இப்படி இருக்கையில் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள வந்த ரசிகர்கள் பலரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை என்பதால் நேரு உள்விளையாட்டு அரங்கத்தின் கேட்களை உடைப்போம் என்று உச்சகட்ட கோபத்தில் கூறியுள்ளார்கள்.
கையில் உள்ளே செல்வதற்கான பாஸ்கள் வைத்திருந்தும் அவர்களை உள்ளே அனுமதிக்கவில்லை. இப்படி இருக்கையில் ரசிகர்கள் பலரும் அதிர்ச்சி அடைந்தார்கள். இப்படி இருக்கையில் ரசிகர் ஒருவர் பேசும்போது, " எங்களை மட்டும் இப்போது உள்ளே விடவில்லை என்றால், கேட் உடைக்கப்படும், மேலே ஏறப்படும், ரூல்ஸ் மீறப்படும். எங்களை உள்ள விடவில்லை என்றால் அடுத்த படத்திற்கு கூட்டம் வராது. நாங்கள் எத்தனை மணிக்கு வந்தோம் தெரியுமா? மாலை 5 மணியில் இருந்து போராடிக் கொண்டிருக்கிறோம். மாவட்டத் தலைவர் உள்ளே போய் உட்கார்ந்து கொண்டு இருக்கிறார்.

இதற்கு முன்னர்: அவனவன் இதுக்கு எவ்வளவு செலவு செய்துள்ளார்கள் தெரியுமா? நான் மட்டும் இல்லை இங்கு வந்த அனைவரும் சொந்த பணத்தை செலவு செய்து வந்துள்ளார்கள். சிலர் தங்களது குழந்தைகளை அழைத்துக் கொண்டு வந்துள்ளார்கள். எதற்காக, தனுஷைக் காட்டுவதற்காகத்தானே? அப்படி வந்தும் என்ன பலன்? இன்னும் காலையில் இருந்து யாருமே சாப்பிடவில்லை. இதுவரை தனுஷ் படத்தின் பல ஆடியோ லாஞ்ச் நடைபெற்றுள்ளது. ஆனால் அதில் ஒரு ஆடியோ லாஞ்ச்சில் கூட இப்படி நடைபெறவில்லை.
கேட் உடைக்கப்படும்: அப்பா, அம்மா காலில் விழ கூட தயங்குவார்கள், ஆனால் தனுஷ் காலில் விழுகிறார்கள் என்றால் என்ன காரணம்? அவரைப் பார்த்து வளர்ந்த பசங்க எல்லோரும். கன்னியாகுமரி, திருநெல்வேலி என பல மாவட்டங்களில் இருந்து வந்துள்ளார்கள். இவ்வளவு பணம் செலவு செய்து வருவதற்கு பதிலாக அவனவன் வீட்டிலேயே நிம்மதியாக இருந்திருப்பான். காவல்துறையை நான் தவறு சொல்ல மாட்டேன். அவர்கள் அவர்களின் வேலையைச் செய்கிறார்கள். நான் மாவட்டத்தலைவரைத்தான் கேள்வி கேட்கிறேன். சேலம், திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி மாவட்ட தலைவர்கள் எதற்காக எங்களுக்கு பாஸ் கொடுத்தீங்க? கிட்டத்தட்ட இரண்டாயிரம் பேர் வெளியே நிற்கிறார்கள். நீங்கள் எதற்கு பாஸ் கொடுக்கறீர்கள்? அடுத்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் எங்களை உள்ளே விடவில்லை என்றால், கதவு உடைக்கப்படும், மேலே ஏறப்படும், ரூல்ஸ் மீறப்படும். அடுத்த படத்திற்கு நான் எனது ஊரில் இருந்து பஸ்ஸை கிளப்ப மாட்டேன். அவற்றைத் நானே தடுப்பேன்.


Click it and Unblock the Notifications











