நாங்க உன்கூட இருக்கோம் தனுஷ் அண்ணா.. விவாகரத்து அறிவிப்புக்கு பின் பெருகும் ரசிகர்கள் ஆதரவு!

சென்னை: நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் ஒருமனதாக பிரிய முடிவு எடுத்திருப்பதாக அறிவித்துள்ள நிலையில், நடிகர் தனுஷ் மீது தான் எல்லா தவறும் உள்ளதாக ட்ரோல்கள் மற்றும் மீம்கள் நெகட்டிவிட்டியை பரப்பி வருகின்றன.

இந்நிலையில், தனுஷ் ரசிகர்கள் "WE ARE WITH U DHANUSH ANNA" என்கிற ஹாஷ்டேக்கை ட்விட்டரில் தெறிக்கவிட்டு நடிகர் தனுசுக்கு பக்க பலமாக தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

இருவரும் விவாகரத்து செய்யவில்லை என்றும் பிரிவு பற்றியே ஆலோசித்து வருவதாகவும் மீண்டும் இருவரும் இணைந்து வாழவும் வழிகள் உள்ளன என தனுஷ் ரசிகர்கள் ஏகப்பட்ட ட்வீட்களை போட்டு தங்களின் கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

கஷ்டமா இருக்கு

கஷ்டமா இருக்கு

நடிகர் தனுஷின் மாறன் திரைப்படம் ஒடிடியில் வெளியாகப் போகிறதே என்கிற அறிவிப்பு வெளியானதில் இருந்தே சோகத்தில் இருந்த ரசிகர்களுக்கு மேலும் ஒரு பெரிய அதிர்ச்சியாக தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் பிரிவு செய்தி அமைந்து விட்டது. நீங்க பிரிந்து போனா.. எனக்கு ஏன் தலைவா கஷ்டமா இருக்கு என ரசிகர்கள் இந்த பிரிவை விரும்பாததை தெளிவாக தெரிவித்துள்ளனர்.

ஸ்டே ஸ்ட்ராங் தலைவா

ஸ்டே ஸ்ட்ராங் தலைவா

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் மருமகனான நடிகர் தனுஷ் அவரது வழியை பின் பற்றி படங்களிலும் ஆன்மிக வாழ்க்கையிலும் ஈடுபட்டு வரும் நிலையில், இப்படி பிரிவு அறிவிப்பை அறிவித்த நிலையில், ரஜினிக்கும் தனுசுக்கும் இடையே பிரச்சனை என்பது போல வதந்திகளை சிலர் பரப்பும் தகவல்களால் கடுப்பான தனுஷ் ரசிகர்கள் Stay Strong Thalaiva என ரஜினிக்கும் தனுசுக்கும் சொல்வது போல இருவரது படத்தையும் ஷேர் செய்து டிரெண்ட் செய்து வருகின்றனர்.

நாங்க இருக்கோம் அண்ணா

நாங்க இருக்கோம் அண்ணா

ஹேட்டர்கள், ட்ரோல் செய்பவர்கள் மற்றும் ஆபாசமாக கமெண்ட் செய்பவர்களை எதிர்த்து உங்களுக்கு எப்போதும் உண்மையுள்ள உயிர் ரசிகனாக இருப்போம் தனுஷ் அண்ணா என ஏகப்பட்ட தனுஷ் ரசிகர்கள் ட்விட்டரை தெறிக்கவிட்டு வருகின்றனர்.

நெகட்டிவிட்டி உலகம்

நெகட்டிவிட்டி உலகம்

இந்த உலகம் மோசமான நெகட்டிவிட்டிகளை கொண்டு இருக்கிறது. ஆனால், அதைப்பற்றி எல்லாம் நீங்க கவலைப்பட வேண்டாம். விரைவில் இந்த பிரச்சனையில் இருந்து மீண்டு வருவீரகள் என ஏகப்பட்ட ரசிகர்கள் தனுசுக்கு முழு ஆதரவை அளித்து வருகின்றனர்.

Recommended Video

Dhanush & Aishwarya Separation | Aishwarya போட்ட Tweet - இந்த பிரிவு தேவை | Filmibeat Tamil
அப்பா அம்மா ஆரோக்கியம்

அப்பா அம்மா ஆரோக்கியம்

இந்த விவகாரத்தில் அனைவரது கவனமும் நடிகர் ரஜினிகாந்தின் ஆரோக்கியத்தில் மட்டுமே அக்கறை செலுத்துகிறது. ஆனால், அதே போலத்தானே நடிகர் தனுஷின் அப்பா கஸ்தூரி ராஜா மற்றும் அம்மா விஜயலக்‌ஷ்மி அம்மாவின் உடல் நலம் பாதிக்காதா? தேவையில்லாமல் நெகட்டிவிட்டியை பரப்ப வேண்டாம் என தனுஷ் ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X