எதுக்கு இப்படி ஒரு போஸ்...நானே வருவேன்...தனுஷ் தந்த மாஸான அப்டேட்

சென்னை : அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் நானே வருவேன் படத்தின் மாஸான அப்டேட்டை தனுஷே தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். படத்தின் புதிய ஸ்டில்லுடன் இந்த அப்டேட்டை வெளியிட்டுள்ளார் தனுஷ்.

நீண்ட இடைவேளைக்கு பிறகு செல்வராகவன் - தனுஷ் கூட்டணி இணைந்துள்ள படம் நானே வருவேன். இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார். கமர்ஷியன் என்டர்டைனர் படமாக இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.

செல்வராகவன் வில்லனா

செல்வராகவன் வில்லனா

ஆக்ஷன், த்ரில்லர் படமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தில் இந்துஜா ரவிச்சந்திரன், எல்லி அவ்ராம், யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தில் செல்வராகவன் வில்லன் ரோலில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார். அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தின் ஷுட்டிங் ஊட்டி உள்ளிட்ட பகுதிகளில் எடுக்கப்பட்டு வந்தது.

தனுஷ் தந்த அப்டேட்

தனுஷ் தந்த அப்டேட்

படத்தின் ஷுட்டிங் விறுவிறுப்பாக நடத்தப்பட்டு வந்த நிலையில், நானே வருவேன் ஷுட்டிங் நிறைவடைந்து விட்டதாகவும், விரைவில் வர உள்ளான் என ட்விட்டரில் பகிர்ந்துள்ளார் தனுஷ். கார் மீது கெத்தாக படுத்திருப்பது போன்ற பிளாக் அண்ட் ஒயிட் போட்டோவையும் தனுஷ் வெளியிட்டுள்ளார். நானே வருவேன் இந்த ஆண்டு இறுதியில் தியேட்டர்களில் வெளியிடப்பட உள்ளதாம்.

தோல்வியடைந்த தனுஷ் படங்கள்

தோல்வியடைந்த தனுஷ் படங்கள்

விரைவில் படத்தின் ரிலீஸ் தொடர்பான தகவல்கள் வெளியிடப்பட உள்ளதாம். . இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக இரண்டு ஹீரோயின்கள் நடித்துள்ளனர். இவர்களில் எல்லி அவ்ராம், ஸ்வீடன் நாட்டை சேர்ந்தவர் ஆவார். தனுஷை வைத்து பல வெற்றி படங்களைக் கொடுத்தவர் செல்வராகவன். சமீப காலமாக தனுஷ் நடித்த படங்கள் தொடர்ந்து தோல்வி அடைந்து வருகின்றன. இந்நிலையில் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள நானே வருவேன் படத்தை தான் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

தியேட்டரில் தனுஷ் படம்

தியேட்டரில் தனுஷ் படம்

கர்ணன் படத்திற்கு பிறகு தனுஷ் நடித்த படங்கள் அனைத்தும் ஓடிடி.,யில் தான் ரிலீஸ் ஆகி உள்ளன. அப்படி ஓடிடி.,யில் ரிலீஸ் ஆன படங்கள் அனைத்தும் படுதோல்வி அடைந்துள்ளன. நீண்ட நாட்களுக்கு பிறகு தனுஷ் நடித்த படம் தியேட்டரில் வர உள்ளதாலும் செல்வராகவன் படம் என்பதாலும் ரசிகர்களால் இந்த படம் அதிகம் எதிர்பார்க்கப்படும் படமாக உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X