Don't Miss!
- News
முதுபெரும் தலைவர் நல்லக்கண்ணுக்கு உடல் நலம் பாதிப்பு..ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை
- Finance
சென்செக்ஸ் 670 புள்ளிகள் சரிவு.. 2 முக்கியக் காரணம்..!!
- Technology
108எம்பி ரியர் கேமரா கொண்ட புதிய ஒப்போ 5G போனின் அறிமுக தேதி வெளியானது.! ரெடியா இருங்க..!
- Sports
திறமைகளை வளர்த்து கொள்ளுங்கள்.. இல்லை சூர்யகுமாரால் ஆபத்து வரும்.. நெஹ்ரா கொடுத்த எச்சரிக்கை
- Automobiles
ஷோரூம்களுக்கு வர தொடங்கிய மாருதியின் விலை குறைவான கார்! திருவிழா மாதிரி பொதுமக்கள் கூட்டம் கூடுதாம்!
- Lifestyle
சாணக்கிய நீதியின் படி இந்த நபர்கள் எதிரிகளை விட ஆபத்தானவர்களாம்... இவங்கள பக்கத்துலேயே சேர்க்காதீங்க...!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
சத்தம் காட்டாமல் பண உதவி செய்த நடிகர் தனுஷ்.. நன்றியுடன் வீடியோ போட்ட போண்டா மணி!
சென்னை: நானே வருவேன், வாத்தி, கேப்டன் மில்லர் என படு பிசியாக இருக்கும் நடிகர் தனுஷ் சத்தமே காட்டாமல் காமெடி நடிகர் போண்டா மணிக்கு பண உதவி செய்துள்ளார்.
நிஜ சாக்கடையில் இறங்கி நடித்ததால் தனது இரு சிறுநீரகங்களும் செயலிழந்து விட்டன என மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் போண்டா மணி கூறியதும் ஒட்டுமொத்த திரையுலகமே சோகத்தில் ஆழ்ந்தது.
உயிருக்கு போராடும் சக கலைஞரை காப்பாற்ற வேண்டும் என ஒவ்வொரு நடிகர்களாக முன் வந்து உதவி செய்து வருகின்றனர்.
தனுஷின் கேப்டர் மில்லர் ஓடிடி ரைட்ஸை தட்டி தூக்கிய அமேசான்… ரிலீஸுக்கு முன்பே கோடிகளில் பிசினஸ்!

போண்டா மணிக்கு சிகிச்சை
இரு சிறுநீரகங்களும் செயலிழந்து விட்ட நிலையில், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை விரைவில் நடிகர் போண்டா மணிக்கு செய்யப்படவிருக்கிறது. அதற்கு அதிக பணம் செலவாகும் என்பதால், நடிகர்களிடம் சமீபத்தில் உதவி கேட்டு வீடியோ ஒன்றை பதிவிட்டு இருந்தார் காமெடி நடிகர் போண்டா மணி. அவரது நிலையை அறிந்த சினிமா பிரபலங்கள் தொடர்ந்து அவருக்கு உதவி செய்ய முன் வந்துள்ளனர்.

வடிவேலு ஆதரவு
வடிவேலுவின் காமெடி காட்சிகளில் அதிகப்படியாக நடித்து பிரபலமான போண்டா மணிக்கு வேண்டிய உதவிகளை செய்ய தயாராக இருப்பதாக நடிகர் வடிவேலு உறுதி அளித்துள்ளார். மேலும், போண்டா மணியுடன் போனில் பேசியுள்ள வடிவேலு, விரைவில் அவரை வந்து சந்திப்பதாகவும் கூறியுள்ளார்.

விஜய்சேதுபதி உதவி
போண்டா மணியின் நிலை குறித்து அறிந்ததுமே நடிகர் விஜய்சேதுபதி போண்டா மணியின் வங்கி கணக்கில் ஒரு லட்சம் ரூபாய் பணத்தை போட்டுள்ளார். இதை அறிந்த போண்ட மணி சமீபத்தில் வெளியிட்ட வீடியோவில் விஜய்சேதுபதி கொடுத்த ஒரு லட்சம் எனக்கு ஒரு கோடி மாதிரி என பாராட்டி நன்றி தெரிவித்தார்.

தனுஷ் ஒரு லட்சம்
விஜய்சேதுபதியை தொடர்ந்து நடிகர் தனுஷ் தற்போது போண்டா மணியின் வங்கி கணக்கில் ஒரு லட்சம் ரூபாய் உதவியாக அளித்துள்ளார். அதற்கு நன்றி தெரிவித்து வெளியிட்டுள்ள வீடியோவில் தம்பி தனுஷ் நீ அனுப்பிய ஒரு லட்சம் ரூபாய் பணம் எனக்கு வந்து சேர்ந்து விட்டது. உன் நல்ல மனசுக்கு ரொம்ப நன்றி எனக் கூறியுள்ளார்.

கேப்டன் மில்லர்
மாறன், திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட தமிழ் படங்களை தொடர்ந்து இந்த ஆண்டு மேலும், நானே வருவேன், வாத்தி என இரு படங்கள் தனுஷ் நடிப்பில் வெளியாக உள்ளது. கேப்டன் மில்லர் படத்திற்கு பூஜை போடப்பட்டுள்ள நிலையில், அந்த படத்தில் படு பிசியாக நடித்து வருகிறார் தனுஷ். மேலும், தி கிரேமேன் 2 ஹாலிவுட் படத்திலும் நடிக்க உள்ளார். இந்நிலையில், காமெடி நடிகர் போண்டா மணியின் கஷ்டத்தை புரிந்து கொண்டு அவர் உதவி செய்திருப்பது ரசிகர்களால் வெகுவாக பாராட்டப்பட்டு வருகிறது.