»   »  5 படங்களில் ஹீரோ... இரண்டு பெரிய படத் தயாரிப்பு... கூடவே இயக்கம்... 'அடங்காத' தனுஷ்!

5 படங்களில் ஹீரோ... இரண்டு பெரிய படத் தயாரிப்பு... கூடவே இயக்கம்... 'அடங்காத' தனுஷ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

தனுஷின் நீண்ட நாள் இயக்குநர் கனவு நிறைவேறியுள்ளது. ஆம்... பவர் பாண்டி என்ற படத்தை தயாரித்து இயக்குகிறார் தனுஷ்.

ஆனால் இந்த பொறுப்பை அவர் கையில் எடுத்திருக்கிற நேரம்தான் ரொம்ப முக்கியம்.

கொடி, வடசென்னை, எனை நோக்கிப் பாயும் தோட்டா, ஆங்கிலப் படம் என பல படங்களில் நடிப்பது மட்டுமில்லாமல் பா. இரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் அடுத்தப் படத்தையும் தனுஷ் தயாரிக்கிறார்.

Dhanush and his busy schedule

இத்த பிஸி ஷெட்யூலில் அவர் இயக்குநர் அவதாரமெடுத்திருப்பதுதான் கோடம்பாக்கத்துக்கு சர்ப்ரைஸ் சமாச்சாரம்!

எப்படி இத்தனை படங்களையும் மேனேஜ் பண்ணுவார்?

தனுஷ் நடிக்க வந்த புதிதில் வரிசையாக அவர் படங்கள் வெற்றிப் பெற்றதும், ஒரே நேரத்தில் ஒரு டஜன் படங்களை ஒப்புக் கொண்டார். ஆனால் கால்ஷீட் கொடுப்பதில் ஏக சொதப்பலாகிவிட்டது. இதில் ராகவா என்ற படம் பெரும் பஞ்சாயத்துக்குள்ளாகி, ட்ராப்பாகிவிட்டது. அடுத்து டாக்டர்ஸ் என்ற படமும் ட்ராப் (இது குடும்ப தயாரிப்பு).

Dhanush and his busy schedule

கொஞ்சம் சுதாரித்து, கால்ஷீட்களை ஒழுங்குபடுத்திக் கொண்டு மீண்டும் ஸ்டெடியானார் தனுஷ். அத்தனை பெரிய பிரச்சினையைச் சமாளித்தவருக்கு, நடிப்பு, தயாரிப்பு, புதிதாக இயக்கம் பெரிய விஷயமாக இருக்காது என்கிறார்கள் தனுஷின் நட்பு வட்டத்தில்.

Dhanush and his busy schedule

பவர் பாண்டி போஸ்டர், நடிகர்கள், தொழில்நுட்பக் குழு எல்லாவற்றையும் பார்த்து ரொம்பவே நம்பிக்கையுடன் இருக்கிறார்கள் பாக்ஸ் ஆபீசில்.

பார்ப்போம்!

English summary
Dhanush turned as director through Power Pandi amidst his very busy schedule.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X