Idli Kadai Audio Launch: தனுஷ் அந்த விஷயத்துல ரொம்பத் தெளிவு.. அருண் விஜய் என்னங்க இப்படி சொல்றாரு!

சென்னை: நடிகர் தனுஷ் இயக்கி நடித்துள்ள படம் இட்லி கடை. இந்த படம் வரும் அக்டோபர் மாதம் 1ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று அதாவது செப்டம்பர் 14ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்த படத்தில் நடித்துள்ள நடிகர் அருண் விஜய், படம் குறித்தும் படத்தின் இயக்குநர் தனுஷ் குறித்தும் பல சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.

அவர் பேசுகையில் " தனுஷ் உடன் பணியாற்றுவது என்பது மிகவும் எதிர்பார்த்து காத்திருந்தது. ராயன் படம் பார்த்ததுமே நான் அவரது இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்று நான் நினைத்தேன். ஆனால் அது இவ்வளவு சீக்கிரம் நடக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. அவர் கதை சொன்ன விதம், அதில் எனது கதாபாத்திரம், அந்த கதாபாத்திரம் பயணிக்கும் உலகம் என்பவை எல்லாம் என்னை மிகவும் ஈர்த்தது.

மிக முக்கியமாக படத்தில் உள்ள எமோஷன் என்பது, எந்த இடத்திலும் மிஸ் ஆகாமல் படம் முழுவதும் கொண்டு வந்து அதை கிளைமாக்ஸில் ரசிகர்களுடன் அவர் கனைக்ட் செய்த விதம் சிறப்பு. தனுஷ் ரசிகர்களுக்கு மட்டுமல்ல, குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் பிடித்தமான சிறந்த படமாக இது இருக்கும். தனுஷின் திறமைகளைப் பார்த்து நான் வியந்து விட்டேன். முதல் முறையாக பல நட்சத்திரங்களுடன் இணைந்து நான் நடித்துள்ளேன்.

Dhanush Idli Kadai Audio Launch Arun Vijay Speech He Appreciates
Photo Credit:

ரொம்ப தெளிவு: மணிரத்னம், மகிழ் திருமேனி, அறிவழகன் என பல அனுபவம் வாய்ந்த இயக்குநர்களுடன் நான் பணியாற்றி உள்ளேன். ஆனால் தனுஷின் ஸ்டைல் என்பது மொத்தமாக வித்தியாசமாக இருந்தது. ஒரு ஷாட் எடுப்பதாக இருந்தாலும் அதில் மிகவும் கவனமாகவும் தெளிவாகவும் எடுக்கிறார். மிகவும் முதிர்ச்சியுடன் கையாண்டார். மிகவும் தெளிவாக அவருக்கு என்ன வேண்டுமோ அதை நடிகர்களிடம் இருந்து வாங்கியுள்ளார். அந்த வகையில் அவருக்கு தனி பாராட்டுகள்" என்று பேசியுள்ளார்.

நான்காவது படம்: இவரது பேச்சு தனுஷ் ரசிகர்கள் மட்டும் இல்லாமல் சினிமா ரசிகர்கள் மத்தியிலும் பரவலாக கவனத்தைப் பெற்றுள்ளது. தனுஷ் இயக்கத்தில் வெளிவரும் நான்காவது படம் இட்லி கடை. இதற்கு முன்னர் பவர் பாண்டி, ராயன் மற்றும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் ஆகிய படங்கள் வெளிவந்துள்ளது. அந்த மூன்று படங்களும் மூன்று விதமான கதைக்களத்தை கொண்ட படங்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X