Idli Kadai Box Office Day 1: முதல் நாளே கல்லா கட்டிய இட்லி கடை.. தனுசின் ராசிக்கு தனலாபம் போலயே!

சென்னை: நடிகர் தனுஷ், அருண் விஜய், நித்யா மேனன், ஷாலினி பாண்டே, சத்யராஜ், ராஜ்கிரன் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவான படம் இட்லி கடை. இந்த படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். படம் நேற்று அதாவது அக்டோபர் 1ஆம் தேதி ரிலீஸ் ஆனது. படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று, ஓடிக்கொண்டு உள்ளது. இந்நிலையில் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு வந்துள்ளது என்பது குறித்து பார்க்கலாம்.

நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், பாடகர், கதை, திரைக்கதை ஆசிரியர் என தமிழ் சினிமாவில் சகலகலா வல்லவனாக உள்ளவர் தனுஷ். மேலே அவர் குறித்து அதாவது அவரது திறமைகள் குறித்து குறிப்பிட்ட அனைத்திலும் தனது பங்கினை செலுத்தி, இட்லி கடை என்ற படத்தை உருவாக்கி உள்ளார். மிகவும் பிரமாண்டமான கதைக்களத்துடன் படத்தை எடுப்பதை காட்டிலும் எளிய கதைகள் ரசிகர்களுடன் மிகவும் விரைவில் கனெக்ட் ஆகும் என்பதால் தனுஷ் இந்த படத்தை எடுத்துள்ளார். அவரது முயற்சிக்கு பலனும் கிடைத்துள்ளது.

Dhanush Idli Kadai Box Office Collection Day 1 is More Than 10 5 Crores In India

கிராமத்துக் கதை: இட்லி கடை படத்தை பொறுத்தவரையில் அதன் போஸ்டரில் தொடங்கி, டீசர், டிரைலர் , பாடல்கள் உள்ளிட்ட அனைத்தையும் கவனிக்கும்போது படம் கிராமத்து கதைக்களத்தை கொண்டது என்ற எண்ணம் ரசிகர்களுக்கு உருவானது. படத்தின் கதையை தனது சொந்த மாவட்டமான தேனி மாவட்டத்தில் தனது குழந்தைப் பருவத்தில் தனது கிராமத்தில் அவர் எப்படியான மனிதர்களை எதிர் கொண்டாரோ, அப்படியான வாழ்க்கையை அவர் இந்த படத்தில் படமாக்கியதாக தெரிவித்தார்.

ரசிகர்கள் ஆதரவு: படத்தின் புக்கிங் தொடங்கிய போது பெரிய அளவில் படக்குழுவினருக்கு திருப்தியைக் கொடுக்கவில்லை. அதே நேரத்தில் படத்தின் புக்கிங் மிகவும் ஸ்லோவாகவே சென்று கொண்டு இருந்தது. சரி படம் வெளியான பின்னர் ரசிகர்கள் என்ன சொல்கிறார்களோ அதைப் பொறுத்துதான் படம் வெற்றியை நோக்கி நகர்கிறதா? அல்லது தோல்வியை நோக்கி நகர்கிறதா என்ற கேள்வி பலருக்கும் இருந்தது. இப்படி இருக்கையில் படம் வெற்றியை நோக்கி நகர்கிறது என்று கூறும் அளவுக்கு படம் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

Dhanush Idli Kadai Box Office Collection Day 1 is More Than 10 5 Crores In India

முதல் நாள் வசூல்: அதாவது, ரசிகர்களிடம் இருந்து படத்திற்கு நல்ல விமர்சனம் கிடைத்து வருவதால் படக்குழு உச்சகட்ட மகிழ்ச்சியில் உள்ளது. இது மட்டும் இல்லாமல், இந்த வார இறுதிக்குள்ளாகவே படம் பேமிலி ஆடியன்ஸால் ரசிக்கப்படும் என்றும் படக்குழு நம்பும் அளவுக்கு படத்திற்கான விமர்சனங்கள் இருக்கின்றன. எப்படியும் படத்திற்கு குடும்ப ரசிகர்கள் மற்றும் அதிகப்படியான பெண் ரசிகர்கள் வருவார்கள் என்பதால் வரும் காலங்களில் படத்தின் வசூல் அதிகரிக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம். படம் முதல் நாளில் இந்தியாவில் மட்டும் ரூபாய் 10.50 கோடிகள் வசூலித்துவிட்டதாக சாக்நிக் வலைதளம் தெரிவித்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X