Idli Kadai First Half Twitter Review: இட்லி கடை படத்தின் முதல் பாதி எப்படி இருக்கு? டிவிட்டர் விமர்சனம் இதோ!
சென்னை: தனுஷ் இயக்கி நடித்துள்ள படம் இட்லி கடை. இந்த படம் இன்று அதாவது அக்டோபர் 1ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. தமிழ்நாட்டில் படம் காலை 9 மணிக்கு சிறப்புக் காட்சி என்றாலும், வெளிநாடுகளில் படத்தின் ரிலீஸ் நேரம் என்பது, காலை 6.30 மணி முதலே திரையிடப்பட்டு வருகிறது. இப்படி இருக்கும்போது, இட்லி கடை படம் எப்படி உள்ளது என்பது குறித்து ரசிகர்கள் எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார்கள். அது தொடர்பாக இந்த தொகுப்பில் காணலாம்.
படம் பார்த்த ரசிகர் ஒருவர், " படம் தொடங்குவதே வெளிநாட்டு கதைக்களத்தில் தான் தொடங்குகிறது. தனுஷ் மற்றும் அருண் விஜய்யின் கதாபாத்திரங்களை பில்டப் செய்வது தொடர்பான காட்சிகளாக உள்ளது. நித்யா மேனன் கதாபாத்திரம் மிகவும் அழகாகவும் பலரும் விரும்பும் படியும் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் நித்யா மேனன் கதாபாத்திரத்தைச் சுற்றி பல சுவாரஸ்யமான மற்றும் நகைச்சுவையான காட்சிகளும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
சிறப்பான முதல் பாதி: ஒரு நடிகராக தனுஷ் இந்த படத்திலும் அசத்திவிட்டார். குறிப்பாக எமோஷனல் காட்சிகளில் அவரது நடிப்பு தரமாக உள்ளது. ஜி.வி. பிரகாஷ் குமாரின் இசை மற்றும் பாடல்கள் கச்சிதமாக உள்ளது. இடைவேளைக்கு முன்னர் வரும் பின்னணி இசை பிரமாதம். இடைவேளை காட்சி உண்மையாலுமே மிகச் சிறப்பாக உள்ளது. இதில் இருந்து தான் படம் அடுத்த கட்டத்திற்கு நகர்வதைப் போல் உள்ளது. படத்தின் முதல் பாதி நாம் டிரைலரில் என்ன பார்த்தோமோ அதே தான் உள்ளது. மொத்தத்தில் முதல் பாதி மிகவும் பிரமாதம். இரண்டாம் பாதிக்காக வையிட்டிங்" என்று பதிவிட்டுள்ளார் அந்த இணைய வாசி.

வழக்கமான கதை: அதேபோல் மற்றொருவர், " இட்லி கடை படத்தின் முதல் பாதி வழக்கமான படத்தின் கதையாக உள்ளது. படத்தின் அடுத்தடுத்த காட்சிகளை யூகிக்கும் படியான திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. மெலோடிராமா கதைக்குள் படத்தின் திரைக்கதை சென்று சென்று வருகிறது. முதல் பாதியில் சில எமோஷனல் காட்சிகள் நன்றாகவே வேலை செய்துள்ளது என்று பதிவிட்டுள்ளார்.
பிரமாதம்: அதேபோல் பிரபல விமர்சகர் கிரிஸ்டோபர் கனகராஜ் தனது எக்ஸ் பக்கத்தில், " மிகவும் எளிமையான மற்றும் அழகான கதை. யூகிக்கக்கூடிய திரைக்கதையாக இருந்தாலும், எமோஷனல் காட்சிகளால் முதல் பாதியை பிரமாதப்படுத்தி உள்ளார். படத்திற்கு ஜி.வி. பிரகாஷின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை சிறப்பாக உள்ளது. படத்தின் முதல் பாதியைப் பொறுத்தவரை, அறிமுக காட்சி, கன்னுக்குட்டி காட்சி மற்றும் இடைவேளை காட்சிக்கு முந்தைய காட்சியான இட்லியை ருசிக்கும் காட்சி மிகவும் சிறப்பாக உள்ளது என்று பதிவிட்டுள்ளார். படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பாசிடிவான விமர்சனங்கள் வந்து கொண்டு இருப்பதால் படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.


Click it and Unblock the Notifications











