Idli Kadai Box Office Prediction: எட்டுத்திக்கும் பாராட்டு.. எகிறும் புக்கிங்.. லாபம் பார்க்கும் இட்லி கடை!
சென்னை: நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், பாடகர், கதை, திரைக்கதை ஆசிரியர் என தமிழ் சினிமாவில் சகலகலா வல்லவனாக உள்ளவர் தனுஷ். மேலே அவர் குறித்து அதாவது அவரது திறமைகள் குறித்து குறிப்பிட்ட அனைத்திலும் தனது பங்கினை செலுத்தி, இட்லி கடை என்ற படத்தை உருவாக்கி உள்ளார். இந்த படம் இன்று அதாவது அக்டோபர் 1ஆம் தேதி ரிலீஸ் ஆகியுள்ளது. படம் பார்த்த பலரும் படத்தை பாராட்டி வருகிறார்கள். இப்படி இருக்கும்போது, படத்தின் முதல் நாள் வசூல் எந்த அளவுக்கு இருக்கும் என்பது குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.
இட்லி கடை படத்தை பொறுத்தவரையில் அதன் போஸ்டரில் தொடங்கி, டிரைலர் உள்ளிட்ட அனைத்தையும் கவனிக்கும்போது படம் கிராமத்து கதைக்களத்தை கொண்டது என்ற எண்ணம் அனைவருக்கும் எழுந்தது. இப்படி இருக்கும்போது படத்தை நடிகர் தனுஷ் தனது சொந்த மாவட்டமான தேனி மாவட்டத்தில் படமாக்கினார். மேலும் தனது குழந்தைப் பருவத்தில் தனது கிராமத்தில் அவர் எப்படியான மனிதர்களை எதிர் கொண்டாரோ, அப்படியான வாழ்க்கையை அவர் இந்த படத்தில் படமாக்கியதாக தெரிவித்தார்.

படத்தின் புக்கிங் தொடங்கிய போது பெரிய அளவில் படம் ஒர்க் - அவுட் ஆகவில்லை என்பதை பார்க்க முடிந்தது. இது மட்டும் இல்லாமல், கரூரில் ஏற்பட்ட நெரிசலால் மக்கள் மரணமடைந்தது தொடர்பான விவாதங்கள் பரபரப்பாக நடைபெற்று கொண்டு இருந்ததால், இட்லி கடை படத்தின் ப்ரீ-புக்கிங் குறித்த பேச்சுக்களும் அதன் மீதான கவனமும் மிகவும் கணிசமானதாக இருந்தது.
விமர்சனம்: இந்நிலையில் படம் வெளியான பின்னர் படத்திற்கு ரசிகர்கள் எந்த அளவுக்கு ஆதரவு தருகிறார்கள் என்பதை பொறுத்துதான் படத்தின் முதல் நாள் வசூலே இருக்கும் என்று பலரும் பேசி வந்த நிலையில், படம் பார்த்த ரசிகர்கள் பலரும் படம் மிகவும் சிறப்பாக இருப்பதாக இணையதளத்தில் குறிப்பாக எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்கள். இதனால் படத்தின் புக்கிங் என்பது மளமளவென அதிகரித்து வருகிறது.

வசூல் கணிப்பு: ரசிகர்களிடம் இருந்து படத்திற்கு நல்ல விமர்சனம் கிடைத்து வருவதால் படக்குழு உச்சகட்ட மகிழ்ச்சியில் உள்ளது. இது மட்டும் இல்லாமல், இந்த வார இறுதிக்குள்ளாகவே படம் பேமிலி ஆடியன்ஸால் ரசிக்கப்படும் என்றும் படக்குழு நம்புகிறது. படம் நன்றாக உள்ளது என்று விமர்சனங்கள் வெளியான பின்னர் பெரு நகரங்களில் மட்டும் இல்லாமல் தமிழ்நாடு முழுவதும் படத்தின் புக்கிங் அதிகரித்து வருகிறது. இதனால் இது படத்தின் வசூலில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும். முதல் நாளில் படம் தமிழ்நாட்டில் குறைந்தது ரூபாய் 10 கோடிகளில் இருந்து ரூபாய் 15 கோடிகளுக்கு மேல் வசூலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பெண் ரசிகர்கள்: இது மட்டும் இல்லாமல் படம் பார்த்த ரசிகர்கள் இந்த படம் கிராமத்து ரசிகர்கள் மத்தியிலும், பெண்கள் மத்தியிலும் பெரிய கவனத்தையும் வரவேற்பையும் பெறும் என்பதால் எதிர்காலத்திலும் படத்தின் வசூலில் அது எதிரொலிக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. படம் பார்த்த்த பலரும் இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் குமாரின் இசை மிகவும் சிறப்பாக இருப்பதாக பாராட்டி வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











