உறுதியான தனுஷின் அடுத்த தெலுங்கு திரைப்படம்.. பூஜா ஹெக்டே தான் கதாநாயகியா!?

சென்னை: நேற்று தனுஷின் பிறந்தநாள் என்பதால் அவரின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

தனுஷின் ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் என தனுஷுக்கு நேற்று வாழ்த்து மழை பொழிந்தனர்.

தனுஷின் அடுத்த தெலுங்கு திரைப்படம் குறித்த முக்கிய அப்டேட்டும் உறுதியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ரசிகர்கள் கொண்டாட்டம்

ரசிகர்கள் கொண்டாட்டம்

தனுஷ் நடிப்பில் கார்த்திக் நரேன் இயக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நேற்று வெளியானது. மாறன் என தலைப்பிடப்பட்டுள்ள இந்த படத்தில் தனுஷ் பத்திரிக்கையாளராக நடிக்கிறார். மாறன் ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

நீண்டுள்ள படவரிசை

நீண்டுள்ள படவரிசை

தனுஷின் நடிப்பில் Atrangi Re எனும் பாலிவுட் திரைப்படம் ரிலீசுக்கு காத்துள்ளது. The Gray Man படத்தின் இறுதிக்கட்டம் மீதமுள்ளது. தனுஷ் தற்போது மாறன் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். இதையடுத்து செல்வராகவன் இயக்கும் படம், சன் பிக்ச்சர்ஸ் தயாரிக்கும் படம், சேகர் கம்முலா இயக்கும் படம் ஆகியவற்றில் கவனம் செலுத்த உள்ளார் தனுஷ்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தெலுங்கு பட இயக்குனர் சேகர் கம்முலா தனுஷை வைத்து இயக்கவுள்ள படத்தை குறித்து முன்னரே அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இந்த படம் மிகப்பெரிய பட்ஜெட்டில்

தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகளில் வெளிவரவுள்ளது. இந்நிலையில் தனுஷ் மற்றுமொரு தெலுங்கு பட இயக்குனருடன் இணைவது உறுதியாகியுள்ளது.

வாழ்த்து தெரிவித்தார்

வாழ்த்து தெரிவித்தார்

தற்போதுள்ள கல்விச் சூழலை முன்வைத்து வெங்கி அட்லூரி இயக்கத்தில், SITHARA ENTERTAINMENTS தயாரிப்பில் வெளிவர உள்ள படத்தில் தனுஷ் கதாநாயகனாக நடிக்கவுள்ளதாக முன்னரே தகவல்கள் வெளியாகின. இதனை தனுஷுக்கு நேற்று இன்ஸ்டாகிராமில் வாழ்த்து தெரிவித்து உறுதிபடுத்தியுள்ளார் வெங்கி அட்லூரி. தெலுங்கு, தமிழ் ஆகிய இரண்டு மொழிகளில் இந்த திரைப்படம் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது.

தெலுங்கு படங்கள்

தெலுங்கு படங்கள்

இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. பூஜா ஹெக்டே தற்போது விஜய்யுடன் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். பின்னர் மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக ஒரு படம், பவன் கல்யாணுக்கு ஜோடியாக ஒரு படம் என தெலுங்கில் இரண்டு படங்களில் நடிக்க உள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. தனுஷுடன் பூஜா ஹெக்டே இணைந்து நடிப்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X