twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தனுஷ் ஒரு பச்சோந்தி, சிம்பு ஒரு சோம்பேறி: கவுதம் மேனன்

    By Siva
    |

    சென்னை: நடிப்பு என்று வந்துவிட்டால் தனுஷ் ஒரு பச்சோந்தி என இயக்குனர் கவுதம் மேனன் தெரிவித்துள்ளார்.

    சிம்பு, மஞ்சிமா மோகனை வைத்து இயக்கிய அச்சம் என்பது மடமையடா படம் ஹிட்டாகியுள்ள மகிழ்ச்சியில் உள்ளார் கவுதம் மேனன். இதற்காக அவர் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில் அவர் தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,

    மாஸ்

    மாஸ்

    அனைவரும் என்னிடம் இருந்து மாஸ் படத்தை எதிர்பார்த்தனர். அதை என்னால் அச்சம் என்பது மடமையடா மூலம் கொடுக்க முடிந்தது. முதல் பாதி கவுதம் மேனன் படமாகவும், இரண்டாம் பாதி கமர்ஷியலாகவும் இருந்தது.

    பிடிவாதம்

    பிடிவாதம்

    படம் இயக்குவதில் பிடிவாத குணம் இருப்பது முக்கியம். ஆனால் அந்த குணத்தாலேயே வேலை இல்லாமல் போகக்கூடும் என்பதும் எனக்கு புரிகிறது.

    அல்லு அர்ஜுன்

    அல்லு அர்ஜுன்

    விண்ணைத் தாண்டி வருவாயா படத்தில் நடிக்க தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனிடம் கேட்டேன். ஆனால் அவரோ படத்தில் கமர்ஷியலாக எதுவும் இல்லை என்று கூறி நடிக்க மறுத்துவிட்டார்.

    தனுஷ்

    தனுஷ்

    தனுஷ் ஒரு பச்சோந்தி. அவர் கதாபாத்திரத்திற்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்வதில் வல்லவர். சிம்புவும் அப்படித் தான். ஆனால் அவருக்கு கவனச் சிதறல் உள்ளது.

    சிம்பு

    சிம்பு

    சூப்பர் ஸ்டார் ஆகும் அனைத்து குணங்களும் சிம்புவுக்கு உள்ளது. ஆனால் கூடவே அவருக்கு சோம்பேறித்தனமும் உள்ளது. அதற்காக அவர் படப்பிடிப்புக்கு சரியாக வரமாட்டார் என்று இல்லை. சிறு வயதில் இருந்தே செய்ததையே செய்து அவருக்கு போர் அடித்துவிட்டது. அவரது நடிப்புத் திறமைக்கு ஏற்ற தீணி தேவை.

    English summary
    Director Gautham Menon said that Dhanush is a chameleon when it comes to acting while Simbu is lethargic.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X