»   »  மாரி படத்தில் ‘சேரி’த் தலைவனாக நடிக்கும் தனுஷ்...

மாரி படத்தில் ‘சேரி’த் தலைவனாக நடிக்கும் தனுஷ்...

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள மாரி படத்தில் தனுஷின் கதாபாத்திரம் சேரி மக்களின் தலைவர் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

‘காதலில் சொதப்புவது எப்படி', ‘வாயை மூடி பேசவும்' ஆகிய படங்களை இயக்கியவர் பாலாஜி மோகன். இவர் தற்போது தனுஷை வைத்து ‘மாரி' என்னும் படத்தை இயக்கிவருகிறார். இதில் தனுஷுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். மேலும், இப்படத்தில் பின்னணி பாடகரான விஜய் யேசுதாஸ், மற்றும் ரோபோ சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

இப்படத்தை தனுஷின் ‘வுண்டர்பார் பிலிம்ஸ்' நிறுவனமும், ராதிகா சரத்குமாரின் ‘மேஜிக் பிரேம்ஸ்' நிறுவனமும் இணைந்து பிரம்மாண்டமாக தயாரிக்கிறது.

போஸ்டர்...

போஸ்டர்...

அனிருத் இசையமைக்க, ஓம்பிரகாஷ் ஒளிப்பதிவு செய்து வருகிறார். சமீபத்தில் இப்படத்தின் போஸ்டர் வெளியானது. இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

சேரித்தலைவன்...

சேரித்தலைவன்...

போஸ்டரில் தனுஷின் கெட்டப்பைப் பார்த்த போதே, அவர் வித்தியாசமான கதாபாத்திரத்தில் இப்படத்தில் வருகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. தற்போது அதனை உறுதி செய்யும் வகையில் தனுஷ் சேரி தலைவனாக நடிப்பதாக தகவல்கள் கசிந்துள்ளது.

லோக்கல் பாஷை...

லோக்கல் பாஷை...

மேலும், இப்படத்தில் தனுஷ் சென்னை லோக்கல் பாஷை பேசுகிறாராம். ஏற்கனவே தனுஷ் தனது முந்தைய படங்கள் சிலவற்றில் சென்னைத் தமிழ் பேசி நடித்திருந்தது குறிப்பிடத்தக்க்து.

படப்பிடிப்பு...

படப்பிடிப்பு...

இப்படத்தின் அடுத்தக் கட்ட படப்பிடிப்பு சென்னையில் உள்ள குடிசைப் பகுதிகளிலும் திருவல்லிக்கேணி மார்க்கெட் பகுதிகளிலும் நடத்தப்பட உள்ளதாகத் தெரிகிறது.

English summary
Source says that Dhanush is playing a local slum chieftain in Maari, which is also the reason why he has to speak in Madras bashai.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil