Don't Miss!
- News
அவசரப்படாதீங்க அண்ணே.. எடப்பாடிக்கு போன "அட்வைஸ்".. புதிய கூட்டணியை கைவிட்டது ஏன்? என்ன நடந்தது?
- Sports
ஓ இதுதான் ட்ரிப்பிளா திருப்பி குடுக்குறதா? சோதித்து பார்த்த நியூசி,.. சூர்யகுமார் தரமான பதிலடி!
- Lifestyle
இந்த 4 ராசிக்காரங்க பணத்தை கையாளுவதில் கில்லாடிகளாம்... இவங்களுக்கு எப்பவும் பணக்கஷ்டம் வராதாம்...!
- Technology
பச்சையாக டீஸ் செய்து காட்டிய OnePlus.! ஆஹா..ஓஹோனு ஒன்னுமில்லை.. ஆனா ஹைப் எகுறுது.!
- Automobiles
மாருதி, ஹூண்டாயை அண்ணாந்து பாக்க வைத்த டாடா! சம்பவம் லோடிங்! தளபதி 67-ஐ விட எதிர்பார்ப்பு எகிறிகிட்டே போகுது!
- Finance
மூலதன செலவு ரூ.10 லட்சம் கோடியாக அதிகரிப்பு.. நிதியமைச்சர் கொடுத்த சூப்பர் அப்டேட்!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
போயஸ் கார்டனில் பிரம்மாண்டமான வீடு … ஐஸ்வர்யாவுடன் குடியேறும் முடிவில் தனுஷ்?
சென்னை: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான தனுஷ் பல படங்களில் நடித்து வருகிறார்.
வாத்தி, கேப்டன் மில்லர் படங்களில் நடித்து வரும் தனுஷ், அடுத்து சேகர் கம்முலா இயக்கத்திலும் ஒரு படத்தில் கமிட் ஆகியுள்ளார்.
இந்நிலையில், தனுஷ் போயஸ்கார்டனில் கட்டியுள்ள பிரம்மாண்டமான வீட்டில் எப்போது யாருடன் குடியேறப் போகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.
கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்.. கந்தாரா படத்திற்கு பாராட்டு சொன்ன தனுஷ்!

விவாகரத்து முடிவு
தனுஷின் கேரியரில் பக்கபலமாக இருந்தவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். ஐஸ்வர்யாவின் வருகைக்குப் பின்னர், தனுஷின் கேரியரில் மிகப் பெரிய சக்ஸஸ் கிடைத்தது. ஆனாலும், திடீரென அவர்கள் இருவரும் பிரிவதாக அறிவித்தனர். இதனால், தனது மகன்களுடன் வாழ்ந்து வருகிறார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். நாங்கள் இருவரும் விவாகரத்து செய்யப்போவதாகவும், இனிமேல் தனித்தனி பாதைகளில் பயணிக்கப் போவதாகவும் ஒன்றாக அறிவித்திருந்தனர். விவாகரத்து அறிவிப்புக்கு பின்னர் தனுஷ் பெயரை தனது சமூக வலைதள பக்கங்களில் இருந்து நீக்கி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் என மாற்றியிருந்தார்.

சமாதான பேச்சுவார்த்தை
இந்நிலையில், சமீபத்தில் தனுஷ் - ஐஸ்வர்யா தம்பதியினரின் மூத்த மகன் யாத்ராவின் பள்ளி நிகழ்ச்சிக்கு இருவரும் ஒன்றாக சென்றிருந்தனர். விவாகரத்து செய்வதாக அறிவித்த பின்னர் இருவரும் ஒன்றாக இருந்த இந்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலானது. இந்நிலையில், தனுஷும் ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் தங்கள் விவாகரத்தை முடிவை கைவிடுவதாகவும் மீண்டும் இணைந்து வாழவிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. ரஜினிகாந்தின் வீட்டில் இரு குடும்பத்தினரும் சந்தித்து நடத்திய பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பிரம்மாண்டமான வீடு
இதனிடையே தனுஷ் சென்னை போயஸ் கார்டன் பகுதியில் பிரம்மாண்டமான வீடு கட்டி வருகிறார். பல கோடி ரூபாய் மதிப்பில் இந்த வீடு கட்டப்பட்டு வரும் நிலையில், ஆரம்பக்கட்ட பணிகளின் போது தனுஷுக்கு நிதி நெருக்கடி இருந்ததாகவும், ரஜினியிடம் உதவி கேட்டதாகவும் சொல்லப்பட்டது. ஆனால், ரஜினி உதவி செய்யாததால் தான், ஐஸ்வர்யா - தனுஷ் இடையே பிரச்சினை ஏற்பட்டதாக அப்போது சொல்லப்பட்டது. இந்நிலையில், தனுஷ் தனது பிரம்மாண்டமான வீட்டுக்கு ஜனவரியில் குடியேற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐஸ்வர்யாவுடன் என்ட்ரி
போயஸ் கார்டனில் கட்டப்பட்டு வரும் வீட்டின் அனைத்து பணிகளும் வரும் டிசம்பர் மாதத்திற்குள் நிறைவடையும் என சொல்லப்படுகிறது. அதனால், ஜனவரியில் கிரக பிரவேஷம் நடத்த தனுஷ் திட்டமிட்டுள்ளாராம். அதுவும் ஐஸ்வர்யாவுடன் சேர்ந்து புதிய வீட்டில் குடியேறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தனுஷ், ஐஸ்வர்யா, மகன்கள் யாத்ரா, லிங்கன் ஆகியோர் குடும்பத்துடன் புதிய வீட்டுக்குள் குடியேறவுள்ளதாக வெளியான தகவல், ரசிகர்களிடம் உற்சாகத்தை கொடுத்துள்ளது.