தனுஷ் நடிக்க வேண்டிய ரோலில் தான் ஃபகத் ஃபாசில் நடித்தாரா...இப்படி மிஸ் ஆகிடுச்சே
சென்னை : பிற மொழி ஹீரோக்கள் தமிழ் சினிமாக்களில் பல முக்கிய ரோல்களில் நடித்து வருவதை போல், தமிழ் ஹீரோக்கள் பலரும் பிற மொழிகளில் நடித்து வருகிறார்கள். சூர்யா, விஜய் சேதுபதி, எஸ்.ஜே.சூர்யா, கார்த்தி போன்றவர்களுக்கு மற்ற மொழிகளிலும் பெரிய அளவில் ஃபேன்ஸ் பேஸ் இருக்கு.

விஜய் சேதுபதி தெலுங்கை தொடர்ந்து இந்தி, மலையாள மொழி சினிக்களிலும் நடித்து வருகிறார். கோலிவுட்டில் எப்படி விஜய் சேதுபதி,விக்ரம் போன்றவர்கள் எந்த கேரக்டர் கொடுத்தாலும் அந்த கேரக்டரோடு ஒன்றி போய் நடிப்பார்களோ, அதே போல் மலையாளத்தில் நடிகர் ஃபகத் ஃபாசில் எந்த கேரக்டராக இருந்தாலும் வெளுத்து வாங்குவார்.
தமிழில் வேலைக்காரன், விக்ரம் போன்ற படங்களில் நடித்தவர், தெலுங்கில் புஷ்பா படத்தின் முலம் அறிமுகமானார். புஷ்பா படத்தை இயக்கிய டைரக்டர் சுகுமார், ஆரம்பத்தில் அந்த படத்தை ஒரே பாகமாக தான் இயக்க முடிவு செய்துள்ளார். பிறகு ஃபகத் ஃபாசிலின் கேரக்டர் மிகவும் பிடித்து விட்டதால் படத்தை இரண்டு இரண்டு பாகங்களாக இயக்க முடிவு செய்துள்ளார்.
புஷ்பா 2 படத்தின் ஷுட்டிங் ஆகஸ்ட் மாதம் துவங்கும் என சொல்லப்படும் நிலையில், புஷ்பா 3 படத்தையும் இயக்க படக்குழு முடிவு செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. இதனால் விஜய் சேதுபதி, பாலிவுட் நடிகர்கள் என பலரையும் புஷ்பா 2 ல் நடிக்க வைத்து வருவதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் சமீபத்தில் தனியார் டிவி சேனல் ஒன்றிற்கு ஃபகத் ஃபாசில் ஒரு பேட்டி அளித்துள்ளார். அதில், மலையளாத்தில் தான் நடித்து வெளிவந்த கும்பலங்கி நைட்ஸ் படத்தில் முதலில் தனுஷ் தான் நடிக்க வேண்டியது. ஆனால் அந்த சமயத்தில் தனுஷை நடிக்க வைக்க முடியாமல் போனதால் தான் அந்த ரோலில் நடித்ததாக தெரிவித்துள்ளார். இதை கேட்டு தனுஷ் ரசிகர்கள் ஷாக் ஆகி உள்ளனர்.
டைரக்டர் மது சி.நாராயணன் இயக்கத்தில் 2019 ம் ஆண்டு வெளிவந்த படம் தான் கும்பலங்கி நைட்ஸ்.இந்த படத்தின் தயாரிப்பாளர்களில் ஃபகத் ஃபாசிலும் ஒருவர். குட்டு குடும்பமாக வாழும் 4 சகோதர்கள் பற்றிய கதை. பல விருதுகளை அள்ளி குவித்த இந்த படம் கடந்த 10 ஆண்டுகளில் மலையாளத்தில் ரிலீசான படங்களில் மிகச் சிறந்த படம் என மீடியாக்களால் கொண்டாடப்பட்ட படம் இது.
ஆனால் இந்த படம் எடுக்கப்பட்ட சமயத்தில் தான் தனுஷ், வெற்றிமாறன் இயக்கிய அசுரன் படத்தில் நடித்துக் கொண்டிருந்தார். இந்த படம் தேசிய விருது பெற்றது. அசுரன் படத்தில் பிஸியாக இருந்ததால் தான் தனுஷை கும்பலங்கி நைட்ஸ் டீமால் அந்த படத்தில் நடிக்க வைக்க முடியயாமல் போனதாக சொல்லப்படுகிறது. ஆனால் தற்போது ஃபகத் ஃபாசில் இதை தெரிவித்துள்ளதால், அதில் தனுஷ் நடித்திருந்தால் இன்னும் படம் நன்றாக வந்திருக்கும். அதுவும் தேசிய விருது வாங்கி இருக்கும். இப்படி மிஸ் ஆகி விட்டதே என வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











