»   »  அண்ணன் செல்வராகவனின் புதுப்பேட்டை – 2... மீண்டும் கொக்கி குமாராக மாறும் தனுஷ்!

அண்ணன் செல்வராகவனின் புதுப்பேட்டை – 2... மீண்டும் கொக்கி குமாராக மாறும் தனுஷ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

நடிகர் தனுஷ் தனது அண்ணன் செல்வராகனுடன் புதுப்பேட்டை 2 படத்தின் மூலம் மீண்டும் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

2006 ஆம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் வெளிவந்த படம் புதுப்பேட்டை. சென்னையில் உள்ள புதுப்பேட்டையில் உள்ள குடிசைகளில் வாழும் மக்களின் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படம் ஒரு தாதாயிச கதையாகும்.

இந்த படத்துக்கு என தனி ரசிகர்கள் உள்ளனர்.

இதில் தனுஷ் நாயகனாக நடித்துள்ளார். தனுஷின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. ஸ்நேகாவும் சோனியா அகர்வாலும் நாயகிகளாக நடித்து இருந்தார்கள்.

கொக்கி குமார்

கொக்கி குமார்

புதுப்பேட்டை படத்தில் கொக்கி குமார் கதாபாத்திரத்தில் கலக்கிய தனுஷ் மீண்டும் கொக்கி குமார் அவதாரம் எடுக்க உள்ளதாக பரபரப்பாக பேசப்படுகிறது.

வை ராஜா வை படத்தில்

வை ராஜா வை படத்தில்

என் பேரு குமாரு , கொக்கி குமாரு , கேள்விப்பட்டுகிரியா' என தெனாவெட்டாக தனுஷ் காரில் இறங்கி வந்து பேசும் டயலாக் இப்போது சமூக வலைதளங்களில் பிரபலமாகி வருகிறது. இது ‘வை ராஜா வை' படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கும் தனுஷ் பேசிய வசனமாகும்.

தனுஷ் எமோசனல்

தனுஷ் எமோசனல்

இதைப் பார்த்த தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘எட்டு வருடம் கழித்து என்னை நான் மீண்டும் கொக்கி குமாராக பார்த்தேன். எமோஷனலாகி விட்டேன். யாராவது மீண்டும் கொக்கி குமாருக்கு தொடர்ச்சி உருவாக்குங்கள் ப்ளீஸ்'. என ட்விட் செய்தார். அவர் சொன்ன நேரமோ என்னவோ மீண்டும் அவரது அண்ணன் செல்வராகவனே, புதுப்பேட்டை 2 படத்தை இயக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அண்ணன் இயக்கத்தில்

அண்ணன் இயக்கத்தில்

தனுஷை சினிமாவில் அறிமுகப்படுத்தியவர் அண்ணன் செல்வராகவன்தான். செல்வராகவன் இயக்கத்தில் துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன ஆகிய படங்களில் தனுஷ் நடித்துள்ளார்.

தடுமாறிய செல்வராகவன்

தடுமாறிய செல்வராகவன்

செல்வராகவன் இயக்கிய 'இரண்டாம் உலகம்' படத்திற்கு எதிர்மறை விமர்சனங்கள் வந்ததோடு வியாபார ரீதியிலும் பெரும் தோல்வியை சந்தித்தது. அப்படத்தை தயாரித்த பி.வி.பி சினிமாஸோடு ஏற்பட்ட கருத்துவேறுபாடால், செல்வராகவன் தனது அடுத்த படத்தை இயக்க முடியாமல் தடுமாறி வந்தார்.

இணையும் கூட்டணி

இணையும் கூட்டணி

அண்ணனுக்கு கை கொடுக்கும் வகையில் படம் தயாரிக்க தயாராகியுள்ளார் தனுஷ். காதல் கொண்டேன்', '7ஜி ரெயின்போ காலனி', 'புதுப்பேட்டை' கூட்டணியான இயக்குநர் செல்வராகவன், ஒளிப்பதிவாளர் அரவிந்த் கிருஷ்ணா மற்றும் இசையமைப்பாளர் யுவன் மூவரும் மீண்டும் இணைகிறார்கள். இதனை தனுஷ் உறுதிப்படுத்தி இருக்கிறார்.

மூன்று படங்களில் பிஸி

மூன்று படங்களில் பிஸி

தனுஷ் தற்போது கே.வி.ஆனந்த் இயக்கத்தில் ‘அனேகன்' படத்திலும், பாலிவுட்டில் பால்கி இயக்கத்தில் ‘ஷமிதாப்' படத்திலும் நடித்துள்ளார். இவ்விரு படங்களும் விரைவில் வெளியாக உள்ள நிலையில், பாலாஜி மோகன் இயக்கத்தில் ‘மாரி' படத்திலும் தனுஷ் நடித்து வருகிறார்.

அண்ணனுக்கு கால்ஷீட்

அண்ணனுக்கு கால்ஷீட்

இந்தப்படங்களைத் தொடர்ந்து செல்வராகவன் இயக்கத்தில் ‘புதுப்பேட்டை 2' படத்தில் தனுஷ் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து கருத்து கூறியுள்ள தனுஷ், 'தற்போது இந்த படம் பேச்சுவார்த்தை அளவில் மட்டுமே இருப்பதாகவும், விரைவில் இந்த படத்தில் நடிக்க தயாராக உள்ளதாக கூறியுள்ளார்.

படம் இயக்குவாரா தனுஷ்

படம் இயக்குவாரா தனுஷ்

நடிகராக, தயாரிப்பாளராக வெற்றி பெற்றுள்ள தனுஷ் திரைப்படத்தை இயக்குவாரா என்பது பற்றி தனுஷிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், 'ஒரு படத்தை இயக்குவதற்கு இன்னும் ஏராளமான விஷயங்களை நான் கற்றுக்கொள்ள வேண்டியதுள்ளது. இன்னும் 3 அல்லது 4 வருடங்கள் கழித்து படம் இயக்குவது குறித்து முடிவு செய்வேன்' என்று கூறினார்.

English summary
Actor Dhanush who is awaiting the release of his upcoming Tamil film Anegan and second Bollywood flick 'Shamitabh', has spilled the beans that he might team up with his brother and acclaimed director Selvaraghavan, for a sequel to their 2006 hit film 'Pudhupettai'. The star actor who stunned the audience with his performance in the film has assured to work with Selva soon after the director completes his current film.
Please Wait while comments are loading...