Just In
- 1 hr ago
நீங்கதான் ரியல் ஸ்டார்கள்.. பெண் போலீஸ் அதிகாரிகளை அப்படி பாராட்டிய நடிகை அனுஷ்கா!
- 1 hr ago
'பஹிரா' படபிடிப்பு முடிந்தது.. சம்மரில் ரிலீஸ்!
- 1 hr ago
வாவ்.. லாஸ்லியா, தர்ஷன் படத்துக்கு பூஜை போட்டாச்சு.. டைட்டிலே வித்தியாசமா இருக்கே.. ரசிகர்கள் குஷி!
- 1 hr ago
கையில் கோடாரியுடன் முரட்டு லுக்கில் அல்லு அர்ஜுன்.. 'புஷ்பா' ரிலீஸ் தேதி கெத்தாக அறிவிப்பு!
Don't Miss!
- News
இந்த நிமிடமே நல்ல நேரம்!
- Lifestyle
ஒரே நைட்டுல உங்க தொப்பையை குறைக்க இத செஞ்சா போதுமாம்....!
- Sports
ஆகஸ்ட்டுல இங்கிலாந்து போகுது இந்திய அணி... இந்தியா ஏ அணியோட பயிற்சி ஆட்டத்துல விளையாடறாங்க!
- Finance
அம்பானிக்கு போட்டியாக களமிறங்கும் பிர்லா.. sabyasachi நிறுவனத்தின் 51% பங்குகளைக் கைப்பற்றல்..!
- Automobiles
இந்தியாவில் புதிய பஸ், டிரக் மாடல்களை அறிமுகப்படுத்தியது பாரத் பென்ஸ்!
- Education
பட்டதாரி இளைஞர்களுக்கு ரூ.30 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலை வேண்டுமா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
கர்ணன் மட்டுமல்ல.. மாரி செல்வராஜ் கூட இன்னொரு படமும்.. மாஸ்டர் பிளான் போடும் தனுஷ்!
சென்னை: பரியேறும் பெருமாள் படத்தைத் தொடர்ந்து இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கும் கர்ணன் படத்தில் நடிகர் தனுஷ் நடித்து வருகிறார்.
கர்ணன் படத்தைத் தொடர்ந்து, மீண்டும் ஒரு படத்தில், மாரி செல்வராஜ் உடன் இணைய தனுஷ் முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.
டி40 தொடங்கி டி45 என தனுஷ் அடுத்தடுத்து நடிக்கும் படங்களின் லிஸ்டுகளும், இயக்குநர்களின் பட்டியலும் நீண்டு கொண்டே போகின்றன.
நான் தோற்றுவிட்டேன்.. வெற்றிமாறன் ஜெயித்து விட்டார்.. வசந்தபாலன் வாழ்த்து!

நல்ல வரவேற்பு
பா. ரஞ்சித் தயாரிப்பில் பரியேறும் பெருமாள் படத்தை இயக்கிய அறிமுக இயக்குநர் மாரி செல்வராஜுக்கு முதல் படத்திலேயே பாராட்டுக்களும், விருதுகளும் கிடைத்தன. தேசிய விருது கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த விருது மிஸ் ஆனாலும், மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது.

மலையாள ஹீரோயின்
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த அசுரன் படம் மிகப்பெரிய வெற்றியை கடந்த ஆண்டு பெற்றது. அந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மலையாள திரையுலகின் லேடி சூப்பர்ஸ்டார் மஞ்சு வாரியர் நடித்திருந்தார். இந்நிலையில், கர்ணன் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மீண்டும் ஒர் மலையாள ஹீரோயினான ரஜிஷா விஜயன் நடித்து வருகிறார்.

குட்டி ஜானு
விஜய்சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளியான 96 மற்றும் பிரேம் குமார் இயக்கத்தில் தெலுங்கில் சமந்தா, சர்வானந்த் நடிப்பில் வெளியான ஜானு படத்திலும் குட்டி ஜானுவாக நடித்த கெளரி கிஷன், கர்ணன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர் விஜய்யின் மாஸ்டர் படத்திலும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் இணையும் காம்போ
பரியேறும் பெருமாள் படத்தில் மாரி செல்வராஜின் ஒர்க் புடித்துப் போனதன் காரணமாகத் தான் கர்ணன் படத்தில் தனுஷ் கமிட்டாகி நடித்து வருகிறார். கர்ணன் படத்தின் ஷூட்டிங்கில், மாரி செல்வராஜின் அசாதாரணமான இயக்கும் திறமையை பார்த்து பிரமித்துப் போன தனுஷ், மீண்டும் ஒரு படத்தில் நடிக்க முடிவு செய்திருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.

லிஸ்ட் எகிறுது
பொங்கலுக்கு தனுஷின் பட்டாஸ் படம் திரைக்கு வந்தது. அதனைத் தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜின் டி40 படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது. ராஞ்சனா படத்தை தொடர்ந்து அக்ஷய் குமார், சாரா அலிகானுடன் இணைந்து ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் அட்ரங்கி ரே படத்திலும் தனுஷ் கமிட் ஆகியுள்ளார்.

இன்னும் இருக்கு
பாலிவுட் படம் மட்டும் இன்றி, கார்த்திக் நரேன் இயக்கத்தில் ஒரு புதிய படம், ராட்சசன் இயக்குநர் ராம் குமார் இயக்கத்தில் ஒரு படம் என தனுஷின் லிஸ்ட் நீண்டு கொண்டே போகிறது. கோலிவுட்டின் பயங்கர பிஸியான ஹீரோவாக தனுஷ் தற்போது வலம் வருகிறார். இந்நிலையில், மாரி செல்வராஜுடன் மீண்டும் ஒரு படத்தில் நடிக்கப் போகிறார் என்ற தகவல் தனுஷ் ரசிகர்களுக்கு நிச்சயம் உற்சாகத்தைத் தரும்.