»   »  “பவர் பாண்டி”... ராஜ்கிரணை நாயகனாக்கி இயக்குநராகிறார் தனுஷ்.. இன்று முதல் ஷூட்டிங்! #rajkiran

“பவர் பாண்டி”... ராஜ்கிரணை நாயகனாக்கி இயக்குநராகிறார் தனுஷ்.. இன்று முதல் ஷூட்டிங்! #rajkiran

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ராஜ்கிரணை நாயகனாக்கி 'பவர் பாண்டி' என்ற படத்தின் மூலம் இயக்குநராகவும் அறிமுகமாகிறார் தேசிய விருது பெற்ற நடிகர் தனுஷ்.

நடிகர், பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என தமிழ் சினிமாவின் பன்முகத் திறமையாளராக வெற்றிகரமாக பயணித்து வருபவர் நடிகர் தனுஷ். சமீபகாலமாக இவர் இயக்குநராகவும் அறிமுகமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி வந்தது.

தற்போது இந்தத் தகவல் நிஜமாகியிருக்கிறது.

பவர் பாண்டி...

ராஜ்கிரணை நாயகனாக நடிக்க வைத்து தனது முதல் படத்தை இயக்குகிறார் தனுஷ். அப்படத்திற்கு ‘பவர் பாண்டி' எனப் பெயரிடப்பட்டுள்ளது.

ஷூட்டிங்...

ஷூட்டிங்...

இப்படத்தினை தனுஷின் வுண்டர்பார் நிறுவனம் தயாரிக்கிறது. சென்னையில் இன்று முதல் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது.

25 ஆண்டுகள்...

25 ஆண்டுகள்...

ராஜ்கிரண் சினிமாவில் நடிக்கத் தொடங்கி 25வது ஆண்டு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. எனவே, இந்த ஆண்டில் அவர் தனுஷ் இயக்கத்தில் நாயகனாக நடிப்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

பிரசன்னா...

பிரசன்னா...

இப்படத்தில் ராஜ்கிரணின் மகனாக பிரசன்னா நடிக்கிறார். இவர் தவிர மற்ற நடிகர், நடிகைகள் குறித்த விபரம் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்துக்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார்.

சுவாரஸ்யத்தகவல்...

சுவாரஸ்யத்தகவல்...

தனுஷ் தான் இயக்கும் முதல் படத்தில் ராஜ்கிரணை நாயகனாக்கி இருப்பதில் மற்றொரு சுவாரஸ்யமும் இருக்கிறது. அதாவது 25 ஆண்டுகளுக்கு முன் தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா மூலமாக 'என் ராசாவின் மனசிலே' படத்தில் தான் ராஜ்கிரண் அறிமுகமானார். அந்தப் படம் தான் கஸ்தூரிராஜாவிற்கும் முதல் படம் ஆகும்.

சென்டிமெண்ட்...

சென்டிமெண்ட்...

பெரும் வெற்றியைப் படைத்தது அப்படம். எனவே, சென்டிமெண்டாக தனுஷும் தனது முதல் படத்தில் ராஜ்கிரணை நாயகனாக்கி இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இந்தப் படத்தில் தனுஷும் நடிப்பாரா என்பது குறித்து தகவல்கள் இல்லை.

வாழ்த்துக்கள்...

வாழ்த்துக்கள்...

ஆனால், நடிப்பின் ஊடே இனி இயக்கத்திலும் ஈடுபட தனுஷ் முடிவெடுத்திருப்பதாகத் தெரிகிறது. தொடர்ந்து வெற்றிப்படங்களைக் கொடுத்து வரும் தனுஷ், இயக்குநராகவும் வெற்றி பெற நாமும் வாழ்த்துவோம்.

English summary
Dhanush has been vocal about turning director for quite some time now. Finally, the actor has zeroed in on his debut directorial project. The film, titled Power Paandi, will have Rajkiran in the lead.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X