Idli Kadai Audio Launch: தைரியம் இருந்தா தனுஷ் கூட மோதி ஜெயிச்சு காட்டுங்க.. சவால் விடும் ஸ்ரேயஸ்!

சென்னை: நடிகர் தனுஷ் இயக்கி நடித்துள்ள படம் இட்லி கடை. இந்த படம் வரும் அக்டோபர் மாதம் 1ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று அதாவது செப்டம்பர் 14ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தனுஷின் மேனேஜர் ஸ்ரேயஸ் பேசியது தனுஷ் ரசிகர்கள் மத்தியில் தீயாக பரவி வருகிறது.

ராயன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசும்போது கூட ஸ்ரேயஸ், தனுஷ் குறித்து பேசியதற்கு தனுஷ் பேசுகையில் அவருக்கு பதில் அளித்தார். குறிப்பாக நாம் எளிதில் எமோஷனல் ஆகக் கூடாது என்றும், எல்லாம் நன்மைக்கே என்றும் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார். இப்படி இருக்கும்போது இட்லி கடை படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசுகையில் அதேபோல் ஒரு கருத்தைச் சொல்லி உள்ளார்.

நடிப்புல மோத தயாரா?: அதாவது ஸ்ரேயஸ் பேசும்போது, "ஃபேமஸ் ஆக இரண்டு வழிகள் உள்ளது. ஒன்று உழைத்து ரத்தம் சிந்தி உயரத்திற்குச் செல்வது. இரண்டாவது உயரத்தில் இருப்பவரை அடிப்பது. தனுஷ் சினிமாவில் வளர்த்துவிட்டவர்களே, கொஞ்சம் வளர்ந்த பின்னர் அவரை அடிக்கிறார்கள். நேருக்கு நேர் நடித்து மோதினால் ஓ.கே. தனுஷ் சார் நல்லவனாக இருங்க. அதுக்குன்னு ரொம்ப நல்லவனா இருக்காதீங்க" என்று பேசியுள்ளார். ஸ்ரேயஸ் இவ்வாறு பேச பேச அங்கு கூடி இருந்த தனுஷ் ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். இதனால் நேரு உள்விளையாட்டு அரங்கம் அதிரும் அளவுக்கு ஆர்ப்பரித்தனர். இது தொடர்பான வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Dhanush Manager Shreyas Speech At Idli Kadai Audio Launch He Attack Indirectly SK amp amp Vignesh Shivan

இவர்கள் இருவரா?: ஸ்ரேயஸ் இவ்வாறு பேசி உள்ளது என்பது இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகர் சிவகார்த்திகேயன் ஆகியோரை தான் மறைமுகமாக அவர்களது பெயரைக் குறிப்பிடாமல் விமர்சித்துள்ளார் என்று கூறி வருகிறார்கள். சிவகார்த்திகேயனை சினிமாவுக்கு அழைத்து வந்து அவரது ஆரம்ப காலத்தில் அவருக்கு பக்கபலமாக இருந்ததில் தனுஷ்க்கு முக்கிய பங்கு உண்டு. அதேபோல், போடா போடி என்ற தோல்விப் படத்திற்கு பின்னர் விக்னேஷ் சிவன் படத்தை தயாரிக்க எந்த தயாரிப்பாளர்களும் முன் வரவில்லை. இப்படி இருக்கும்போது அவரது நானும் ரௌடி தான் படத்தை தயாரித்தவர் தனுஷ். இந்த படத்தின் மூலம் தனுஷ்க்கு பெரிய அளவில் லாபம் இல்லை என்றும், படப்பிடிப்பில் பட்ஜெட்டைக் கடந்து கூடுதலாக செலவானதால் அதற்கே சரியாகப் போனது என்றும் கூறப்படுகிறது.

ரசிகர்கள் ரியாக்‌ஷன்: தற்போது சிவகார்த்திகேயன் மற்றும் விக்னேஷ் சிவன் ஆகியோர் தனுஷுடன் முன்பு போல இணக்கத்தில் இல்லை. காரணம் விக்னேஷ் சிவன் மற்றும் நயன் மீது தனுஷ் வழக்கு பதிவு செய்துள்ளார். அதேபோல் சிவகார்த்திகேயனுக்கும் தனுஷுக்கும் இடையில் ஏதோ மனக்கசப்பு இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது இந்த லிஸ்ட்டில் அனிருத்தும் இணைந்து கொண்டார் என்றும் கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X