»   »  தனுஷ் மனதிலும் அரசியல் ஆசை... படத்தின் தலைப்பு கொடி

தனுஷ் மனதிலும் அரசியல் ஆசை... படத்தின் தலைப்பு கொடி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தனுஷ் நடித்த தங்கமகன் படம் ரிலீசுக்கு ரெடியா இருக்கு, பிரபு சாலமன் இயக்கத்தில நடிக்கிற படமும் விறுவிறுப்பாக போயிட்டு இருக்கு, இப்போ துரை. செந்தில்குமார் இயக்கத்தில தனுஷ் நடிக்கப்போற படத்துக்கு 'கொடி'ன்னு பேரு வச்சிருக்காங்கலாம்.

அரசியல் படம்கிறதால கொடின்னு பேரு வச்சிருக்காங்கலாம், இந்த படத்தில தனுஷ் டபுள் ஆக்சன் பண்ணப்போறாராம். அதனாலதான் படத்துக்கு பரபரப்பு கொடுக்க கொடின்னு வச்சிருக்கிறதா கோடம்பாக்கம் பக்கம் பேசிக்கிறாங்க.

இந்த தலைப்பை பார்த்து தனுஷ் மனசுலயும் அரசியல் ஆசை எட்டிப்பார்க்குதேன்னு சொல்லிக்கிறாங்க.

அரசியல் படம்

அரசியல் படம்

தனுஷ் இதுவரைக்கும் அரசியல் சார்பான படம் எதிலும் நடித்ததில்லை. அரசியல் வசனமோ, அது தொடர்பான பஞ்ச் வசனமோ பேசியதில்லை. இப்போது முதன் முறையாக டைரக்டர் துரை.செந்தில்குமார் இயக்கத்தில் அரசியல் கதை அம்சம் கொண்ட படத்தில் இரு வேடங்களில் நடிக்கிறார் தனுஷ்.

அதிரடி அரசியல்

அதிரடி அரசியல்

இந்தப் படத்தின் கதை முழுக்க முழுக்க அரசியலை மையப்படுத்தி அமைந்துள்ளது. இதற்கு முன்பு தனுஷ் இப்படிப்பட்ட படத்தில் நடித்ததில்லை. இந்தப் படத்தில் அதிரடிக்கு பஞ்சமில்லை. இது தனுஷின் அதிரடி அரசியல் படமாக இருக்குமாம்.

கொடிதான் கதையே

கொடிதான் கதையே

ஒரு கொடிக்காக என்னென்ன கலவரங்கள் பிரச்னைகள் நடக்கிறது என்பதை பற்றிய படமாம். அதற்காகத்தான் படத்திற்கு 'கொடி' என்ற பெயரை தேர்வு செய்துள்ளதாக படக்குழுவினர்.

தனுசின் வடசென்னை

தனுசின் வடசென்னை

வெற்றிமாறனின் 'வடசென்னை' படத்திலும் நடிக்கப்போகிறார் தனுஷ் இதுவும் அதிரடியான படமாக இருக்கும் என்று பேசப்படுகிறது. பிரபு சாலமன் படத்தை முடித்து கொடுத்து விட்டதுதான் கொடி, வடசென்னை படங்களில் கவனம் செலுத்தப்போகிறாராம் தனுஷ்.

English summary
Dhanush new movie name kodi direction Durai Senthil Kumar.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil