»   »  அழகிய கீர்த்தி சுரேஷும்.. தனுஷும் இணைய.. பிரபுசாலமன் இயக்கத்தில் ‘ரயில்’!

அழகிய கீர்த்தி சுரேஷும்.. தனுஷும் இணைய.. பிரபுசாலமன் இயக்கத்தில் ‘ரயில்’!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரபுசாலமன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் படத்திற்கு ரயில் எனப் பெயரிட்டுள்ளனர்.

மைனா, கும்கி, கயல் படங்களைத் தொடர்ந்து தனுஷ் நடிப்பில் புதிய படமொன்றை இயக்கியுள்ளார் பிரபுசாலமன். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தில் தனுஷிற்கு ஜோடி கீர்த்தி சுரேஷ்.

கடந்தாண்டு டிசம்பர் மாதமே ரிலீசாகியிருக்க வேண்டிய இப்படம் சிலப்பல காரணங்களால் தள்ளிப் போனது.

ரயில்...

ரயில்...

இந்நிலையில், தற்போது இப்படத்திற்கு ரயில் என பெயர் வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

டெல்லி டூ சென்னை

டெல்லி டூ சென்னை

அல்லது, டெல்லி டூ சென்னை என்ற பெயரும் கைவசம் உள்ளதாம். தேவைப்பட்டால் மாறலாம் என்றும் தெரிகிறது. இருப்பினும் ரயிலே இறுதியாகும் என்றும் சொல்கிறார்கள்.

பயணங்கள் முடிவதில்லை...

பயணங்கள் முடிவதில்லை...

காரணம் தனது முந்தைய படங்களில் காடு, மலை, கடலைக் காட்டிய பிரபு சாலமன் இந்தப் படத்தில் ரயில் பயணத்தை கதைக்கருவாக கையாண்டுள்ளாராம். படம் முழுக்க தனுஷ் ஓடும் ரயிலில் பயணம் செய்வது போன்று காட்சிகள் அமைந்துள்ளதாம்.

பொருத்தமான தலைப்பு...

பொருத்தமான தலைப்பு...

எனவே தான் இப்படத்திற்கு ரயில் என்ற தலைப்பு பொருத்தமாக இருக்கும் என படக்குழுவினர் கருதுகிறார்களாம். விரைவில் அதிகாரப்பூர்வமாக படத்தலைப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விரைவில் ரிலீஸ்...

விரைவில் ரிலீஸ்...

பிரபு சாலமனின் இந்தப் படத்திற்கும் இமான் தான் இசை. சத்யஜோதி பிலிம்ஸ் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளனர். விரைவில் படத்தலைப்பும், அதனைத் தொடர்ந்து ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Dhanush’s upcoming movie with Prabhu Solomon is in the final leg of post-production and the makers are eyeing for a suitable release window for the film which was earlier speculated to release in December 2015.Reports say that the team has zeroed in on 2 tentative titles Rail and Delhi to Chennai and they are likely to choose one among these two.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil