»   »  கவுதம் மேனனைத் தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜூடன் கைகோர்த்த தனுஷ்

கவுதம் மேனனைத் தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜூடன் கைகோர்த்த தனுஷ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: 'என்னை நோக்கி பாயும் தோட்டா' படத்தைத் தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பது உறுதியாகியுள்ளது.

'பீட்சா', 'ஜிகர்தண்டா' வெற்றிப் படங்களைத் தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கியிருக்கும் படம் 'இறைவி'. இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பது உறுதியாகியுள்ளது. இந்தத் தகவலை தனுஷ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.

Dhanush Next with Karthik Subburaj

'கொடி', 'தொடரி', 'என்னை நோக்கி பாயும் தோட்டா' ஆகிய 3 படங்கள் தனுஷ் கைவசம் உள்ளன. இதில் 'கொடி' மற்றும் 'தொடரி' படங்களின் படப்பிடிப்பு முடிந்து விட்டது.

'என்னை நோக்கி பாயும் தோட்டா' படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து ஹாலிவுட் படமொன்றிலும் தனுஷ் நடிக்கவுள்ளார்.

கார்த்திக் சுப்புராஜ்-தனுஷ் இணையும் புதிய படம் செப்டம்பர் மாதம் துவங்குகிறது. இப்படத்திற்கு இசை சந்தோஷ் நாராயணன் எனவும் கருணாகரன் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கப் போவதாகவும் கூறுகின்றனர்.

படத்தின் மற்ற நடிக, நடிகையர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
After Ennai Nokki Paayum Thotta Dhanush new Film Signed with Karthik Subburaj.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil