»   »  இனி தனுஷை கையிலேயே புடிக்க முடியாது

இனி தனுஷை கையிலேயே புடிக்க முடியாது

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் தனுஷ் ஸ்போர்ட்ஸ் காரான ஃபோர்ட் மஸ்டாங்கை வாங்கியுள்ளார்.

தனுஷ் தற்போது வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் நடித்து வருகிறார். மேலும் தான் முதன்முதலாக இயக்கியுள்ள பவர் பாண்டி படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணியிலும் பிசியாக உள்ளார்.

இதற்கிடையே தனுஷ் ஸ்போர்ட்ஸ் காரான ஃபோர்டு மஸ்டாங்கை வாங்கியுள்ளார்.

 ஃபோர்டு மஸ்டாங்

ஃபோர்டு மஸ்டாங்

தனுஷுக்கு அதிவேக கார்கள், சொகுசு கார்கள் என்றால் மிகவும் பிடிக்கும். அவரிடம் ஏற்கனவே ஆடி ஏ8 கார் ஒன்று உள்ளது. இந்நிலையில் ஃபோர்டு மஸ்டாங் காரை வாங்கியிருக்கிறார்.

 ரோஹித் ஷெட்டி

ரோஹித் ஷெட்டி

ஃபோர்டு மஸ்டாங் கார் வாங்கியுள்ள இரண்டாவது திரையுலக பிரபலம் தனுஷ். அந்த கார் கடந்த ஆண்டு இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டவுடன் அதை பாலிவுட் இயக்குனர் ரோஹித் ஷெட்டி வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

 தனுஷ்

தனுஷ்

தனுஷிடம் ஃபோர்டு மஸ்டாங் காரை ஒப்படைத்த போது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகி சமூக வலைதளங்களில் தீயாக பரவியுள்ளது. அந்த புகைப்படத்தை தனுஷ் ரசிகர்கள் பெருமையுடன் ஷேர் செய்கிறார்கள்.

 ரோல்ஸ் ராய்ஸ்

ரோல்ஸ் ராய்ஸ்

சொகுசு கார் விரும்பியான தனுஷிடம் ரோல்ஸ் ராய்ஸ் கார் உள்ளதாகவும் கூறப்படுகிறது. அந்த காரை அவர் அண்மையில் வாங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

English summary
Actor Dhanush is now the proud owner of prestigious Ford Mustang car. He is the second celebrity after Bollywood director Rohit Shetty to own a Ford Mustang.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil