»   »  பேட்மேன் தமிழ் ரீமேக்கில் தனுஷ்?

பேட்மேன் தமிழ் ரீமேக்கில் தனுஷ்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

இந்தியில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் பேட்மேன் தமிழில் ரீமேக் செய்யப்பட உள்ளது. அப்படி ரீமேக் செய்யப்பட்டால், அதில் அக்‌ஷய்குமார் வேடத்தில் தனுஷ் நடிப்பார் எனத் தெரிகிறது.

அக்‌ஷய்குமார், சோனம் கபூர், ராதிகா ஆப்தே ஆகியோர் நடித்துள்ள இந்தி படம் பேட்மேன். இந்தப் படம் கடந்த 9-ந்தேதி வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது. பெண்களுக்கான ஆரோக்கியமான நாப்கினை தயாரித்து குறைந்த விலையில் சந்தைக்கு கொண்டு வந்த தமிழகத்தை சேர்ந்த அருணாசலம் முருகானந்தம் என்பவர் வாழ்க்கையை மையமாக வைத்து இந்த படம் உருவாக்கப்பட்டது.

Dhanush in PadMan Tamil remake?

படத்துக்கு கலவையான விமர்சனங்கள் வந்தாலும், வசூலை வாரி குவித்து வருகிறது. எனவே இதே படத்தை தமிழக பின்னணியில் தமிழில் ரீமேக் செய்யும் வேலைகள் நடக்கின்றன.

தமிழ் ரீமேக்கில் அக்ஷய்குமார் கதாபாத்திரத்தில் தனுஷ் நடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. படத்தில் நடிக்க உள்ள நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வுகள் நடைபெற்று வருகிறது.

இது குறித்து அருணாசலம் முருகானந்தம் கூறுகையில், "பேட்மேன் தமிழ் ரீமேக்கில் அக்‌ஷய்குமார் வேடத்தில் நடிகர் தனுஷ் சரியாக இருப்பார் என நான் நினைக்கிறேன். இந்த படத்தில் இந்த ரோலில் தனுஷ் நடிப்பதை பார்க்க நான் ஆவலாக உள்ளேன்," என்றார்.

English summary
Sources say that Dhanush may be ropen in for PadMan Tamil remake

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil