»   »  தனுஷ் வழக்கை மேலூர் நீதிமன்றம் விசாரிக்க மதுரை ஹைகோர்ட் தடை

தனுஷ் வழக்கை மேலூர் நீதிமன்றம் விசாரிக்க மதுரை ஹைகோர்ட் தடை

Posted By:
Subscribe to Oneindia Tamil

மதுரை: தனுஷ் தொடர்பான வழக்கை மேலூர் நீதிமன்றம் விசாரிக்க தடை விதித்து மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை சேர்ந்த கதிரேசன், மீனாட்சி தம்பதி நடிகர் தனுஷ் தங்கள் மகன் என கூறி மதுரை மாவட்ட மேலூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

Dhanush paternity case: Madurai HC issues important directive

இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி தனுஷ் மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கில் அவர் நேற்று முன்தினம் மதுரை நீதிமன்றத்தில் ஆஜரானார்.

தனுஷின் அங்க அடையாளங்கள் சரிபார்க்க உத்தரவிட்ட நீதிமன்றம் வழக்கை மார்ச் 2ம் தேதிக்கு ஒத்தி வைத்தது. அதன்படி வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது தனுஷின் அங்க அடையாளங்களை பரிசோதித்த மருத்துவர் அறிக்கை தாக்கல் செய்தார்.

தனுஷ் தொடர்பான வழக்கை மேலூர் நீதிமன்றம் விசாரிக்க மதுரை உயர் நீதிமன்ற கிளை தடை விதித்துள்ளது. மேலும் உயர் நீதிமன்ற கிளையில் உள்ள வழக்கில் உத்தரவு வரும் வரை இந்த தடை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மரபணு பரிசோதனை செய்ய வேண்டும் என்ற கதிரேசனின் மனு உள்பட தனுஷ் சம்பந்தப்பட்ட அனைத்து மனுக்களின் விசாரண மார்ச் 9ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

English summary
Madurai high court has ordered Melur court not to carry out any case in connection with actor Dhanush.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil