»   »  போலி கையெழுத்து என திருப்புவனம் தம்பதி மனு: தனுஷுக்கு புது தலைவலி?

போலி கையெழுத்து என திருப்புவனம் தம்பதி மனு: தனுஷுக்கு புது தலைவலி?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: திருப்புவனம் தம்பதி தொடர்ந்த வழக்கை ரத்து செய்யக் கோரி மதுரை உயர் நீதிமன்றத்தில் தனுஷ் தாக்கல் செய்த மனுவில் இருப்பது அவர் கையெழுத்து இல்லை என்கிறார்கள் அந்த தம்பதி.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை சேர்ந்த கதிரேசன்-மீனாட்சி தம்பதி நடிகர் தனுஷ் தங்களின் மகன் என மேலூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி தனுஷ் மதுரை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

 போலி கையெழுத்து

போலி கையெழுத்து

எங்கள் வழக்கை ரத்து செய்யக் கோரி தனுஷ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் இருப்பது அவருடைய கையெழுத்து இல்லை. அது போலியானது என்று கூறி மனுவின் நகலை கேட்டு மனு தாக்கல் செய்துள்ளனர் கதிரேசன்-மீனாட்சி தம்பதி.

 அடையாளம்

அடையாளம்

தனுஷின் உடலில் அங்க அடையாளங்கள் சரிபார்க்கப்பட்டபோது மச்சம் ஒன்று லேசர் சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது தெரிய வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

 சான்றிதழ்கள்

சான்றிதழ்கள்

ஏற்கனவே தனுஷின் பிறப்பு மற்றும் பெயர் மாற்றச் சான்றிதழ்களில் ஏகக் குழப்பம் நிலவியது. இதை தனுஷிடம் தனியாக நீதிபதி விசாரித்தார். விசாரணை முடிந்து வெளியில் வந்த தனுஷ் முகத்தில் ஏக கவலை தெரிந்தது. தனுஷின் அம்மா விஜயலட்சுமி சோகம் தாங்கிய முகத்துடன் மகனை அழைத்துச் சென்றார்.

 மரபணு சோதனை

மரபணு சோதனை

யார் என்ன சொன்னாலும் தனுஷ் எங்கள் மகன் தான், அதை நிரூபிக்க மரபணு சோதனைக்கு தயார் என்று கதிரேசன்-மீனாட்சி தம்பதி மீண்டும் மீண்டும் தெரிவித்து வருகிறார்கள்.

English summary
Dhanush paternity case has taken a new turn as the old couple said that the signature in the petition filed by the actor is not his own.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil