»   »  'காக்கிச் சட்டை'க்காக ஆர்.எம்.வீக்கு தனுஷ் கொடுத்த ரூ 25 லட்சம்

'காக்கிச் சட்டை'க்காக ஆர்.எம்.வீக்கு தனுஷ் கொடுத்த ரூ 25 லட்சம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

காப்பியடித்த கதைகளுக்கே காப்பிரைட் காசு கொடுக்க மறுக்கும் கோடம்பாக்கத்தில், ஒரு தலைப்புக்காக ரூ 25 லட்சத்தைக் கொடுத்திருக்கிறார் நடிகரும் தயாரிப்பாளருமான தனுஷ்.

சிவகார்த்திகேயனை வைத்து, துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் தயாரித்து வரும் படத்துக்கு முதலில் வைக்கப்பட்ட பெயர் டாணா. கிராமங்களில் போலீஸ்காரர்களை டாணாக்காரன் என்றுதான் முன்பெல்லாம் அழைப்பார்களாம். அதனால் அந்தத் தலைப்பு வைத்தார்கள்.


Dhanush pays Rs 25 lakh for a title

ஆனால் தலைப்பு இன்னும் கச்சிதமாக இருக்க வேண்டும் என்று நினைத்த தனுஷ் காக்கிச் சட்டையைப் பிடித்துக் கொண்டார். இந்தத் தலைப்புக்குச் சொந்தக்காரர் ஆர் எம் வீரப்பனின் சத்யா மூவீஸ்.


தலைப்புக்காக ரூ 25 லட்சம் கேட்டிருக்கிறார்கள். தனுஷும் மறுபேச்சின்றி கொடுத்துவிட்டார்.


தன் மாமனார் ரஜினி ஜஸ்ட் ஒரு வார்த்தை சொன்னால் போதும், தானாக அந்தத் தலைப்பு வந்துவிடும் என்பது தெரிந்தும், அவரை இதில் இழுக்க வேண்டாம். நாமே பார்த்துக் கொள்வோம் என்று கூறி டீலை முடித்தாராம் இந்த சூப்பர் மருமகன்!

English summary
Dhanush has paid Rs 25 lakhs for the title of Kaakki Sattai.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil