»   »  பிளட் கேன்சரால் பாதிக்கப்பட்ட 12 வயது ரசிகையை நேரில் சந்தித்து ஆறுதல் சொன்ன தனுஷ்

பிளட் கேன்சரால் பாதிக்கப்பட்ட 12 வயது ரசிகையை நேரில் சந்தித்து ஆறுதல் சொன்ன தனுஷ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வரும் 12 வயது சிறுமியின் ஆசையை ஏற்று, அவரை நேரில் சந்தித்துள்ளார் நடிகர் தனுஷ்.

தமிழ் சினிமாவில் முன்னணி நாயகர்களுள் ஒருவராக பிசியாக நடித்து வருகிறார் தனுஷ். தனது பரபரப்பான படப்பிடிப்புகளுக்கு இடையே புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுமி ஒருவரை நேரில் சந்தித்து, அவரை சந்தோஷப் படுத்தியுள்ளார் அவர்.

சம்பந்தப்பட்ட அந்த சிறுமியின் பெயர் கோட்டீஸ்வரி. 12 வயதான அச்சிறுமி ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

தீவிர ரசிகை...

தீவிர ரசிகை...

தனுசின் தீவிர ரசிகையான அவருக்கு, தனுசை நேரில் சந்திக்க வேண்டும் என நீண்ட நாளாக ஆசை. இதனை தனது பெற்றோரிடம் அவர் தெரிவித்துள்ளார்.

நேரில் சந்திப்பு...

நேரில் சந்திப்பு...

இந்த தகவல் தனுஷ் காதுகளுக்கும் கொண்டு செல்லப்பட்டது. அதனைத் தொடர்ந்து கோட்டீஸ்வரியை அவர் சிகிச்சைப் பெற்று வரும் மருத்துவமனைக்கே நேரில் சென்று சந்தித்துள்ளார் தனுஷ்.

ஆறுதல்...

ஆறுதல்...

தனுஷை நேரில் பார்த்ததும் கோட்டீஸ்வரி உர்சாகம் அடைந்தார். சிறிது நேரம் அவருடன் பேசிக் கொண்டிருந்த தனுஷ், பின்னர் அவருக்கு ஆறுதல் கூறிவிட்டு, அவருடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டு கிளம்பியுள்ளார்.

வடசென்னை...

வடசென்னை...

தனுஷ் தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் வடசென்னை படத்தில் நடித்து வருகிறார். பிரபு சாலமன் இயக்கத்தில் அவர் நடித்த தொடரி படம் விரைவில் ரிலீசாக இருக்கிறது. இது தவிர அக்னி நட்சத்திரம் படத்தின் இந்தி ரீமேக்கிலும் தனுஷ் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

English summary
The 'Thodari' actor paid a little visit to a 12-year-old girl named Kotiswari. Unfortunately, Kotiswari suffers from blood cancer and being a Dhanush fan, she expressed a desire to meet the actor at least once. Dhanush, being the good man that he is, went straight to the girl's family and met his special fan.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil