»   »  தனுஷுடன் இணையும் 'கும்கி' பிரபு சாலமன்: இசை அதே இமான்!

தனுஷுடன் இணையும் 'கும்கி' பிரபு சாலமன்: இசை அதே இமான்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மைனா, கும்கி, கயல் என தனது படங்களில் புதுமுக ஹீரோக்களையே அறிமுகம் செய்து வந்த பிரபு சாலமன் அடுத்த படத்தில் தனுஷ் உடன் இணையப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தனுஷுக்கு அடுத்த அடுத்த படமாக ‘ஷமிதாப்' மற்றும் ‘அனேகன் ரிலீஸுக்காக காத்திருக்கின்றன. அதேபோல் பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், காஜல் அகர்வால் நடிக்கும் படமான ‘மாரி' படத்தின் படப்பிடிப்புகளும் பிசியாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் வெற்றிமாறன் இயக்கத்தில் ‘சூதாடி', வேல்ராஜ் இயக்கத்தில் பெயரிடப்படாத படம் ஒன்றிலும் நடிக்க உள்ளார். இந்த நிலையில் தன்னுடைய படத்தில் நடிக்கவைக்க தனுஷை பிரபு சாலமன் அணுகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரபுசாலமன்

பிரபுசாலமன்

பிரபு சாலமன் இதுவரை எட்டு படங்களை இயக்கியுள்ளார். ‘கண்ணோடு காண்பதெல்லாம்' படம் 1999 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனது. ஆனாலும் ‘மைனா' படம்தான் பிரபு சாலமனுக்கு திருப்புமுனையை ஏற்படுத்திய படமாகும்.

கிராமத்து பின்னணியில்

கிராமத்து பின்னணியில்

கும்கி, கயல் படங்களும் கிராமத்து பின்னணியில் வித்தியாசமான கதை களத்தில் எடுக்கப்பட்டது. எனவே தனுஷ் உடன் புதிய கதை களத்தில் இணைய உள்ளார் பிரபு சாலமன்.

படப்பிடிப்பு எப்போது?

படப்பிடிப்பு எப்போது?

வெற்றிமாறன் இயக்கத்திலும், வேல்ராஜ் இயக்கத்திலும் தனுஷ் நடிக்க உள்ளதாக கூறப்படும் நிலையில் இந்த இரண்டு படங்களில் படப்பிடிப்பும் எப்போது தொடங்கும் என்பது பற்றிய தகவல்கள் வெளியாகவில்லை.

யார் படத்தில்?

யார் படத்தில்?

எனவே பிரபு சாலமன் படத்திற்கான ஸ்கிரிப்ட் ரெடியாக இருக்கும் பட்சத்தில் ‘மாரி' படத்தை முடித்துவிட்டு பிரபு சாலமனுடன் இணைவார் தனுஷ்.இல்லையெனில் பிற இயக்குநர்களின் படங்களை முடித்துவிட்டுத்தான் பிரபுசாலமன் படத்தில் நடிப்பார் என கூறப்படுகிறது.

ஆஸ்தான இசையமைப்பாளர்

ஆஸ்தான இசையமைப்பாளர்

இந்தப் படத்திற்கும் பிரபுசாலமனின் ஆஸ்தான இசையமைப்பாளர் டி.இமான்தான் இசை. கதாநாயகி, மற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த தகவல்கள் இன்னும் முடிவாகவில்லையாம்.

English summary
According to the latest report that is been doing rounds, Dhanush's upcoming movie will be directed by Prabhu Solomon of Mynaa fame. Dhanush, who is currently waiting for the release of his movies Anegan and Shamitabh will start his next project once he is done with Balaji Mohan's Maari.
Please Wait while comments are loading...