»   »  வெற்றிமாறனின் 'வட சென்னை'க்காக கேரம் "விளையாடும்" தனுஷ்!

வெற்றிமாறனின் 'வட சென்னை'க்காக கேரம் "விளையாடும்" தனுஷ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: வட சென்னை படத்திற்காக நடிகர் தனுஷ் கேரம் விளையாட கற்றுக் கொண்டு வருகிறார்.

நீண்ட மாதங்களாக பேச்சுவார்த்தையில் இருந்த வட சென்னை படம் சமீபத்தில் பூஜையுடன் தொடங்கியது. இதுகுறித்து நடிகர் தனுஷ் வட சென்னை 3 பாகங்களாக உருவாகிறது என்று தெரிவித்தார்.


Dhanush Practice Carrom Board for Vada Chennai

இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு மிகப் பிரமாண்டமாக அமைக்கப்பட்ட ஜெயில் அரங்குகளில் படமாக்கப்பட்டு வருகிறது. இதில் தனுஷுக்கு ஜோடியாக சமந்தா, ஆண்ட்ரியா இருவரும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.


இந்நிலையில் இப்படத்தில் கேரம் சம்பந்தப்பட்ட காட்சிகள் இருப்பதாகவும், அதற்காக கேரம் விளையாட்டு வீரர் ஒருவரின் உதவியுடன் தனுஷ் கேரம் விளையாட பயிற்சி எடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.


வட சென்னை மக்களின் வாழ்வில் கேரம் விளையாட்டிற்கும் மிகப்பெரிய பங்குண்டு. அதுதான் கேரம் விளையாட தனுஷ் பயிற்சி எடுப்பதற்கு காரணம் என்று கூறுகின்றனர்.


சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்தை லைக்காவுடன் இணைந்து தனுஷின் வுண்டர்பார் நிறுவனம் தயாரித்து வருகிறது.

English summary
Sources said Dhanush Practice Carrom Board for Vetri Maran's Vada Chennai Movie.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil