»   »  ஐஸ்வர்யா, சௌந்தர்யா இருவருமே திறமையானவர்கள்! - தனுஷ் பாராட்டு

ஐஸ்வர்யா, சௌந்தர்யா இருவருமே திறமையானவர்கள்! - தனுஷ் பாராட்டு

Posted By:
Subscribe to Oneindia Tamil

மனைவி இயக்கத்திலும், மைத்துனி இயக்கத்திலும் தலா ஒரு படம் நடித்த ஒரே ஹீரோ தனுஷாகத்தான் இருப்பார்.

ஐஸ்வர்யா இயக்கிய 3 படத்தில் தனுஷ் ஹீரோ. படம் சுமாராகப் போனாலும், பரவலான பாராட்டுகளைப் பெற்றது அந்தப் படம்.

இப்போது மைத்துனி சௌந்தர்யா இயக்கத்தில் வேலையில்லா பட்டதாரி 2 வில் நடித்துக் கொண்டிருக்கிறார். படம் வரும் ஜூலை 28-ல் பிரமாண்டமாக வெளியாகப் போகிறது.

வெற்றிகரமான இயக்குநர்

வெற்றிகரமான இயக்குநர்

இதற்கிடையில் தானே ஒரு படத்தை இயக்கி, அதை வெற்றிப் படமாகவும் மாற்றிவிட்டார். அதுதான் ப பாண்டி.

நடிகராக தேசிய விருது வாங்கிய தனுஷ், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளராகவும் வெற்றிக் கொடி நாட்டிவிட்டார்.

சகலகலா வல்லவன்

சகலகலா வல்லவன்

சினிமாவில் சகலகலா வல்லவனாக மாறியுள்ள தனுஷ், தன் சினிமா வாழ்க்கை குறித்துப் பேசுகையில் "சினிமா நான் விரும்பி வந்த துறை அல்ல. எனக்கு சினிமா பற்றி எதுவுமே தெரியாது என்பதே உண்மை.

குடும்பத்தினர் கட்டாயம்

குடும்பத்தினர் கட்டாயம்

என் அப்பா, அண்ணன் உள்ளிட்ட குடும்பத்தினர் கட்டாயப்படுத்தியதால் நடிக்க வந்தேன். முதல் படத்தோடு போய்விடலாம் என்றுதான் நினைத்தேன்.

சினிமாதான் எல்லாமே

சினிமாதான் எல்லாமே

சில ஆண்டுகள் கழித்து இது தான் என் தொழில். சினிமாதான் எனக்கு எல்லாமே என்று கடவுள் எழுதி இருக்கிறார் என்பதைப் புரிந்து கொண்டேன். நான் கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறேன்.

ஐஸ்வர்யா - சௌந்தர்யா

ஐஸ்வர்யா - சௌந்தர்யா

ஐஸ்வர்யா, சௌந்தர்யா இருவர் இயக்கத்திலும் நடித்துள்ளேன். இரண்டு பேருமே திறமையானவர்கள். சூப்பர் ஸ்டாரின் மகள்கள். சினிமா பற்றிய நுணுக்கங்கள் அறிந்தவர்கள்... பெரும் வெற்றிகளைப் பெறுவார்கள்...," என்றார்.

English summary
Dhanush has praised his wife Aishwarya, sister in law Soundarya as talented directors.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil