»   »  ஸ்கிரிப்ட்டையும் எழுதிக் கொடுத்து மச்சினி சவுந்தர்யா இயக்கும் படத்தை தயாரிக்கும் தனுஷ்

ஸ்கிரிப்ட்டையும் எழுதிக் கொடுத்து மச்சினி சவுந்தர்யா இயக்கும் படத்தை தயாரிக்கும் தனுஷ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தனுஷ் எழுதியுள்ள திரைக்கதையை சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்க வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரிக்கிறதாம்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து அவரது இளைய மகள் சவுந்தர்யா கோச்சடையான் படத்தை இயக்கினார். இந்நிலையில் சவுந்தர்யா தனது காதல் கணவர் அஸ்வினை பிரிந்து வாழ்வது பற்றி பலரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

Dhanush to produce Soundarya Rajinikanth's movie

ஆனால் அவரோ பேசுபவர்கள் பேசிக் கொண்டே இருக்கட்டும் என அடுத்த படத்தை இயக்க தயாராகிவிட்டார். அவர் இயக்கும் படத்தை தயாரிப்பது வேறு யாரும் அல்ல அவரின் அக்கா ஐஸ்வர்யாவின் கணவர் தனுஷ் தான்.

தனுஷ் தனது வுண்டர்பார் பிலிம்ஸ் மூலம் படத்தை தயாரிக்க மட்டும் அல்ல அதன் ஸ்கிரிப்டை எழுதி சவுந்தர்யாவிடம் கொடுத்தவரே அவர் தான். கதை திரைக்கதை வசனத்தை எழுதி சவுந்தர்யாவிடம் கொடுத்து அவரை இயக்க வைத்து அழகு பார்க்கிறார் தனுஷ்.

தனுஷை இயக்க ஆசையாக உள்ளது என்று ஒரு முறை சவுந்தர்யா தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்த படத்தில் தனுஷ் நடிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

English summary
Dhanush is reportedly producing a movie which will be directed by Soundarya Rajinikanth. Buzz is that Dhanush wrote the script and gave it to Soundarya.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil