»   »  வாயில் கத்தியைக் கவ்விய தனுஷ்.. 'வடசென்னை' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

வாயில் கத்தியைக் கவ்விய தனுஷ்.. 'வடசென்னை' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

Posted By:
Subscribe to Oneindia Tamil
ஹாலிவுட்டை மிஞ்சிய தனுஷின் வடசென்னை ஃபர்ஸ்ட் லுக்- வீடியோ

சென்னை : தனுஷ் நடிப்பில் வெற்றி மாறன் இயக்கியிருக்கும் 'வடசென்னை' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களை தனுஷ் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

மூன்று பாகங்களாக தயாராகும் 'வடசென்னை' படத்தின் முதல் இரண்டு படங்களும் நீண்ட நாட்களாக தயாரிப்பில் உள்ளது.

அதில் முதல் பாகத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களை தனுஷ் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.


வடசென்னை

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி வரும் படம் 'வடசென்னை'. 'வடசென்னை' படம் 3 பாகமாக எடுக்கப்பட இருக்கிறது முதல் பாகத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது.


அரசியல் கதை

அரசியல் கதை

'வடசென்னை' படத்தில் தனுஷ், அமீர், ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். வடசென்னை படம் சென்னையில் மீனவர்கள், மற்றும் அந்த சுற்றுச் வட்டார மக்கள், அவர்களைச் சுற்றி நடக்கும் அரசியல் தான் கதை எனக் கூறப்படுகிறது.


தனுஷ்

தனுஷ்

இப்படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கின்றன. தற்போது நடந்துவரும் டப்பிங் உள்ளிட்ட இறுதிகட்ட பணிகளை முடித்து படத்தை ரம்ஜான் விடுமுறைக்காக ஜூன் 14 அன்று வெளியிட தனுஷ் முடிவெடுத்துள்ளார் என்று கூறப்படுகிறது.


போஸ்டர்

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் தனுஷ். இந்தப் படத்தில் அன்பு எனும் கேரக்டரில் நடித்திருக்கிறார் தனுஷ். இந்த போஸ்டரில் வாயில் கத்தியை கவ்வியவாறு கயிற்றைப் பிடித்து ஏறுகிறார் தனுஷ்.


English summary
Dhanush released 'Vadachennai' first look posters on twitter.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil