»   »  ப்ளீஸ் மறுபடியும் என்னை அப்படி மட்டும் சொல்லாதீங்க: சந்தானத்தை கேட்டுக் கொண்ட தனுஷ்

ப்ளீஸ் மறுபடியும் என்னை அப்படி மட்டும் சொல்லாதீங்க: சந்தானத்தை கேட்டுக் கொண்ட தனுஷ்

Posted By:
Subscribe to Oneindia Tamil
' என் எதிரி தனுஷோட ஃபர்ஸ்ட் ஷோ பார்த்தேன்...' - சிம்பு ஓப்பன் டாக்!- வீடியோ

சென்னை: தயவு செய்து என்னை அப்படி சொல்லாதீர்கள் என்று தனுஷ் சந்தானத்தை கேட்டுக் கொண்டுள்ளார்.

சேதுராமன் இயக்கத்தில் சந்தானம், வைபவி உள்ளிட்டோர் நடித்துள்ள சக்க போடு போடு ராஜா படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. இந்த படத்திற்கு சிம்பு இசையமைத்துள்ளார்.

விழாவுக்கு நடிகர் தனுஷ் வந்திருந்தார்.

தனுஷ்

தனுஷ்

மேடையில் தனுஷும், சிம்புவம் கட்டிப்பிடித்தபோது கைதட்டல்களும், விசிலும் பறந்தன. எதிரிகள் என்று கூறப்படும் இருவரும் பாசத்துடன் கட்டிப்பிடித்தனர். அப்போது சிம்பு ரொம்பவே எமோஷனல் ஆனார்.

அழைப்பு

அழைப்பு

நண்பன் சிம்பு அழைத்ததாலேயே இசை வெளியீட்டு விழாவுக்கு வந்ததாக தனுஷ் தெரிவித்தார். பகையை எல்லாம் மறந்து தனுஷும், சிம்புவும் நன்பர்களாகிவிட்டதையே இது காண்பிக்கிறது.

ஹாலிவுட்

ஹாலிவுட்

தனுஷ் ஹாலிவுட் படத்தில் நடித்துள்ளார். இதனால் மேடையில் பேசிய சந்தானம் தனுஷை ஹாலிவுட் நடிகர் என்று அழைத்தார். உடனே குறுக்கிட்ட தனுஷ் தயவு செய்து மறுபடியும் அப்படி சொல்லாதீர்கள் என்றார்.

பாடம்

பாடம்

ஹாலிவுட் என்பது வேறு மொழி படம், அவ்வளவு தான். தொழிலை நன்றாக கற்றுக் கொள்ள ஹாலிவுட் சென்றேன். அவ்வளவு தான். அதற்காக ஹாலிவுட் நடிகர் என்று எல்லாம் என்னை அழைக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார் தனுஷ்.

English summary
Dhanush attended the audio launch of Santhanam's Sakka Podu Podu Raja for his good friend Simbu. Dhanush has requested Santhanam not to call him as a hollywood actor.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil