என்னை அப்படி கூப்பிடாதீங்க...இளம் நடிகையிடம் கெஞ்சிய தனுஷ்
சென்னை : இந்திய சினிமாவின் சிறந்த நடிகர்களில் ஒருவராக இடம்பிடித்திருப்பவர் தனுஷ். அசுரன், கர்ணன் படங்களுக்காக வரிசையாக சிறந்த நடிகருக்கான தேசிய விருதினையும் வென்று வருகிறார் தனுஷ்.
ஹாலிவுட், பாலிவுட், கோலிவுட், டோலிவுட் என கலக்கி வருகிறார் தனுஷ். ஹாலிவுட்டில் The Gray Man, பாலிவுட்டில் Atrangi Re ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். இந்த படங்கள் எப்போது ரிலீசாகும் என ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். The Gray Man படம் நெட்ஃபிளிக்சில் ரிலீஸ் செய்யப்பட உள்ளது.

ஓடிடி.,யில் தனுஷ் படங்கள்
தனுஷ் நடித்துள்ள அத்ரங்கி ரே படம் கிறிஸ்துமசை முன்னிட்டு வார இறுதி நாளில், டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரில் வெளியிடப்பட உள்ளது. தமிழில் கலாட்டா கல்யாணம் என்ற பெயரில் ரிலீஸ் செய்யப்பட உள்ள இந்த படத்தை ஆனந்த் எல் ராய் இயக்கி உள்ளார். அக்ஷய் குமார், சாரா அலி கான் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இளையராஜா கடவுள் மாதிரி
விரைவில் ரிலீசாக உள்ள அத்ரங்கி ரே படத்தின் ப்ரொமோஷன் வேலைகள் நடந்து வருகிறது. ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பேசிய தனுஷ், இசைஞானி இளையராஜாவை தான் கடவுளாக நினைப்பாக கூறினார். அவரை பற்றி வார்த்தைகளால் விளக்கி சொல்ல முடியாது. இளையராஜாவின் இசை எனக்கு அம்மாவை போன்று தாலாட்டக் கூடியது என்றார்.

அப்படி கூப்பிடாதீங்க
தொடர்ந்து பேசிய தனுஷ், ஷுட்டிங் ஸ்பாட்டில் சாரா அலி கான் தன்னை தலைவா என்று தான் கூப்பிடுவார். ஆனால் அப்படி என்னை கூப்பிட வேண்டாம் என லட்சம் முறை அவரிடம் சொல்லி விட்டேன். ஒரே தலைவர் தான். அவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மட்டும் தான். அந்த பெயரை நான் பெற முடியாது என்றார்.

வரிசையாக தனுஷ் படங்கள்
தனுஷ் நடித்துள்ள மாறன், திருச்சிற்றம்பலம், The Gray Man ஆகிய படங்கள் புத்தாண்டில் ரிலீசாக தயாராக இருக்கின்றன. இந்த படங்களைத் தொடர்ந்து செல்வராகவன் இயக்கும் நானே வருவேன் படத்திலும் தனுஷ் நடிக்க உள்ளார். இவர் நடிக்கும் இரண்டு தெலுங்கு படங்களும் 2022 ல் ரிலீசாக உள்ளன. இதைத் தொடர்ந்து சில இந்தி மற்றும் தமிழ் படங்களில் நடிக்க தனுஷிடம் பேசப்பட்டு வருகிறதாம்.


Click it and Unblock the Notifications











